திருமணம் அல்லது உறவைப் பேணுவதற்கு, மிக முக்கியமான விஷயம் நேரம், நம்பிக்கை மற்றும் முயற்சி. காலப்போக்கில் உறவில் நம்பிக்கை வலுவடைகிறது. மறுபுறம், ஒரு உறவில் 'முயற்சி' முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் அல்லது உங்கள் துணை உறவைப் பேணுவதற்கு முயற்சி செய்யவில்லை என்றால், மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த முயற்சியை மேற்கொள்ளாததற்கு ஒரு காரணம் தம்பதியரின் சிந்தனையில் உள்ள வித்தியாசம்.
பல சமயங்களில் நீங்கள் அல்லது உங்கள் துணை அறியாமல் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள். இது உறவை பலவீனப்படுத்தும். ஆனால் அதற்கு காரணம் அறியாமை மற்றும் முயற்சியின்மை. அத்தகைய ஒருநிலைமை, உறவின் 4 விஷயங்கள் மெதுவாக உறவை முடிவுக்கு கொண்டு வரலாம். இந்த 4 விஷயங்களும் தம்பதிகளுக்கு இடையே உள்ள தூரத்தை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, உறவை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய அந்த 4 விஷயங்களை தெரிந்து கொள்வோம்.
இதையும் படிங்க: நீங்கள் ஒருவரை விரும்புகிறீர்களா? அது காதலா அல்லது வேறு ஏதாவதா? தெரிஞ்சுக்கலாம் வாங்க..
அக்கறை இல்லை:
ஒரு உறவில், உங்கள் துணை நீங்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். மேலும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், அன்புடன், அக்கறை மற்றும் மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும். உதாரணமாக, உங்கள் துணை நோய்வாய்ப்பட்டிருக்கும் சமயத்தில் நீங்கள் அவரை பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையில் நீங்கள் பிஸியாக இருந்தால் அல்லது உங்கள் இருவருக்கும் இடையே நடக்கும் சண்டைக்குப் பிறகு உங்கள் துணையிடம் சாப்பாடு கூட கேட்காமல் இருப்பது. இத்தகையச் செயல் உங்கள் துணையின் இதயத்தில் உள்ள அமைதியையும் அன்பையும் அழித்துவிடும். இது உங்கள் உறவை முறித்துக் கொள்ள வழிவகுக்கும்.
உணர்வுகளை வெளிப்படுத்தவும்:
காதலில் சில சமயங்களில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் உணர்வுகளை நீங்கள் உங்கள் துணையிடம் வெளிப்படுத்தவில்லையென்றால் ,
உங்கள் இருவருக்கும் இடையே தவறான புரிதல் ஏற்படலாம். மேலும் நீங்கள் அவர்களுடன் மகிழ்ச்சியாக இல்லை என்று அவர்கள் உணரலாம். அவர்களுடன் உட்கார்ந்து பேசுங்கள். அவர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.
பிரச்சினைகளை தீர்க்க முயற்ச்சி செய்யுங்கள்:
தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். ஆனால் விரைவில் சண்டையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டாலும், உறவை பனிப்போராக மாற்ற வேண்டாம். விஷயங்களை இழுப்பது அல்லது ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வது, உங்கள் பங்குதாரர் உங்களுடன் பேசுவதை நிறுத்தலாம்.
இதையும் படிங்க: உங்கள் மனைவி மன அழுத்தால் இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!
மீண்டும் மீண்டும் தவறுகள்:
நீங்கள் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்கிறீர்கள், அதற்காக உங்கள் துணையிடம் மன்னிப்புக் கேட்டீர்கள், ஆனால் அதே செயலை அல்லது விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம், உங்கள் வார்த்தைகளின் முக்கியத்துவம் குறையத் தொடங்குகிறது. உங்கள் தவறை மீண்டும் செய்யும் பழக்கத்தால் உங்கள் துணை கோபப்படலாம். இது உங்கள் இருவருக்கும் இடையிலான நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதோடு தூரத்தை அதிகரிக்கும்.