செக்ஸ் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாத பெண்கள்.. கணவரை பற்றி என்ன நினைக்கிறார்கள்!?

First Published | Apr 21, 2023, 8:01 PM IST

பாலியல்ரீதியாக திருப்தி இல்லாத பெண்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பதை இந்த பதிவில் வெளிப்படையாக குறிப்பிட்டிருக்கிறோம். 

வாழ்வில் இணைந்து வாழும் இருநபர்களும் மனம் ஒத்து வாழ்ந்தால் தான், உங்கள் பாலியல் வாழ்க்கை சிறந்ததாக இருக்கும். உலகில் எல்லா மூலைகளிலும் பெண்கள் தங்கள் திருமணத்தில் பாலியல் விரக்தியில் உள்ளனர். அப்படி, பாலியல் விரக்தியில் உள்ள பெண்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

காதல் ஜோடிகளின் நிலைமை.. அனுபவத்தில் சொன்ன பெண்:"நாங்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் பழக ஆரம்பித்த காலத்தில் எனக்கு பட்டாம்பூச்சிகள் பறந்தன. திருமணமான பொழுதில் நாங்கள் உடலுறவு கொள்ளும்போதெல்லாம் என்னுடைய கணவர் முத்தத்தில் ஆரம்பித்து பாலியல் விளையாட்டுகளுடன் உறவில் ஈடுபடுவார். இப்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் என்னுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறார். ஆனால் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் எங்களுக்குள் எதுவும் முன்பு போல் இல்லை. நான் அவரிடம் பாலியல் முன்விளையாட்டுகளை (foreplay) பற்றி உரையாடினேன். சில படங்களை கூட காட்டினேன். ஆனால் அவர் எதையும் செய்யவில்லை. அதனால் உடலுறவு கொள்வதில் நான் ஆர்வம் காட்டவில்லை. அவரும் பாலியல் விரக்தியை வெளிப்படுத்துகிறார் இப்போது. சில வாரங்களாக எங்களுக்குள் எதுவுமே இல்லை"என்கிறார் சோகமாக. 

Tap to resize

பணக்காரர் என்பதால் பாலுணர்வு இல்லாதவரை மணந்த பெண்ணின் அனுபவம்:" இப்போது நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது. நான் வயதான ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் நல்ல பணக்காரர் ஆனால் உடலுறவு விஷயத்தில் சோம்பேறியாக இருக்கிறார். எங்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் வெவ்வேறு மாதிரியான உடலுறவு பொசிஷன்களை இதுவரை முயற்சி செய்ததே கிடையாது. நான் அவருக்கு காமசூத்திரா குறித்து சொன்னேன். அதில் உள்ள பொசிஷன்களை நாம் முயற்சி செய்யலாம் என்று புரிய வைக்க முயன்றேன். கடற்கரை நோக்கிய சொந்த வீடு எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் அங்கு தனியாக வசிக்கிறோம். அங்கு நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில் உடலுறவு விஷயத்தை குறித்து பேசும்போதெல்லாம் எங்களுக்குள் சண்டை மட்டுமே நடக்கிறது. இது ஏன் என்று எனக்கு புரியவே இல்லை"என்கிறார். 

பாலுணர்வே இல்லை என்கிறார் மற்றொரு பெண்:"எனக்கு எப்போதும் பாலுணர்வு இருந்தது. என்னுடைய கணவர் தன்னுடைய பாலியல் வாழ்க்கை பற்றி அதிகமாக பேசுவார். அதனால் நான் நல்ல துணையோடு இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர் முட்டாள்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது. அவரால் பத்து நிமிடங்களுக்கு மேலே எதையும் செய்ய முடியாது. எங்களுக்குள் உடலுறவு ஒரு வார்ம் அப் மாதிரியானது. அவருடைய வேலை முடிந்ததும் எழுந்து தன்னை கழுவ சென்று விடுவார். என்னை அப்படியே விட்டுவிடுவார் என்னுடைய உச்சக்கட்டம் குறித்து, என்னுடைய பாலியல் திருப்தி பற்றிய அவருக்கு எந்த கவலையும் இல்லை. 

இதையும் படிங்க: பாய்பிரெண்டின் குறட்டை சத்தத்தை வைத்து சம்பாதிக்கும் பெண்! என்னது குறட்டைக்கு இவ்ளோ காசா?

இது குறித்து அவரிடம் கேட்ட போது, அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு இப்போது வெறுப்பாக இருக்கிறது. நான் அவரை உடலுறவுக்காக ஏமாற்றுவது குறித்து பகல் கனவு காண தொடங்கிவிட்டேன். அது சரியாக அமைய வாய்ப்புகள் உள்ளன. எதுவும் இல்லாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை"என சொல்லியிருக்கிறார். 

இதையும் படிங்க: காலையில் செக்ஸ் உறவில் ஈடுபடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?!

Latest Videos

click me!