காலையில் செக்ஸ் உறவில் ஈடுபடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?!
morning sex benefits: உடலுறவு மனித வாழ்வின் ஒரு அங்கம். ஆனால் உடலுறவில் ஈடுபட சிறந்த நேரம் எப்போது? என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
பரபரப்பான வாழ்க்கை முறைகளுக்கு இடையே தம்பதிகள் உடலுறவை தவிர்க்கின்றனர். ஏனென்றால் இரவில் மிகவும் சோர்வாக இருக்கும். அப்போது உடலுறவில் ஈடுபட யாரும் விரும்ப மாட்டார்கள். இதனால் தம்பதிகள் ஒரு கட்டத்திற்குப் பிறகு உடலுறவில் ஈடுபட சலிப்படைகிறார்கள். இதற்கு பதிலாக காலையில் உடலுறவு வைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
காலையில், தம்பதியினர் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். அப்போது வேறு எந்த அழுத்தமும் இல்லாததால் மகிழ்ச்சியுடன் பாலுறவில் ஈடுபட முடியும். பாலுணர்ச்சியானது காலையில் உச்சத்தில் இருக்கும் வாய்ப்பு அதிகம். தம்பதிகள் இரவு உடலுறவுக்குப் பதிலாக காலை உடலுறவைத் தேர்ந்தெடுப்பதற்கான சில காரணங்கள் இங்கே உள்ளன.
இரவில் நன்றாக தூங்கினால் காலையில் உடலுறவில் ஈடுபடும் போது சுறுசுறுப்புடன் இயங்க முடியும். சுறுசுறுப்புடன் இருக்கும்போது சுவாரசியமான பாலியல் அனுபவங்களையும் பெறலாம். அதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்வதால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இனப்பெருக்க ஹார்மோன்கள் காலையில் நன்கு சுரக்கும். இது பாலுணர்வு, பாலியல் ஆசையை தூண்டும். அதனால் உடலுறவை உற்சாகமாக அனுபவிக்கலாம். மனநிலையும், புத்துணர்ச்சியுடன் இருப்பதால் காலையில் உடலுறவு கொள்வது எளிது.
இதையும் படிங்க: உடலுறவின் போது ஆண்கள் இப்படி நடந்துகிட்டா பெண்கள் மயங்கிடுவாங்க!!
நீங்கள் உடலுறவில் ஒரு நாளைத் தொடங்கினால், அந்த நாளை மிகவும் மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். நீங்கள் பாசிட்டிவாகவும், நல்ல மனநிலையையும் உணருவீர்கள். காலையில் உடலுறவு கொள்ளும்போது மனதும் அமைதியாக இருக்கும். சோர்வானாலும் மீண்டும் இயங்க தெம்பு இருக்கும்.
இதையும் படிங்க: பாய்பிரெண்டின் குறட்டை சத்தத்தை வைத்து சம்பாதிக்கும் பெண்! என்னது குறட்டைக்கு இவ்ளோ காசா?
நமது உடலில் இருக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்களில் ஆக்ஸிடோசினும் ஒன்று. காலையில் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இதனால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் நெருக்கம் அதிகமாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.