இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவிக்கு இடையில் அன்யோயம் இல்லாமல் போனால் எப்போதும் மனக்கசப்பு தான். கணவனோ மனைவியோ இருவரில் யாரேனும் ஒருவர் பிஸி ஆகவே இருப்பார்கள். இதனால் இயல்பில் நடக்கவேண்டிய உரையாடல் அன்பு பரிமாற்றம் இல்லாமல் போகலாம். உடலுறவு பற்றி ஒருவர் பேச்சை எடுத்தாலும் இன்னொருவர் கண்டுக்காமல் இருப்பார்கள். இப்படி இல்லறத்தில் கணவனோ மனைவியோ அலட்சியமாக இருப்பதால் சில பிரச்சனைகள் வரும்.
வெறுப்பு வரும்...
திருமண வாழ்க்கையில் எப்போதும் உடலுறவு தொடர்பான விஷயங்கள் முக்கிய பங்கு வகிக்கும். இதனால் மனரீதியாக சில பிரச்சனைகள் வரலாம். இது பயங்கரமான உறவுச் சிக்கல்களை உண்டாக்கும். உடலுறவில் எவ்வளவு ஈடுபாடு காட்டாமல் போகிறார்களோ அவ்வளவு தூரம் கருத்து மோதல்கள் வரவும் வாய்ப்புள்ளது. ஏட்டிக்கு போட்டியாக எதையாவது செய்து சண்டை போட்டு கொள்வார்கள். இது அதிகமாகும்போது ஒருவர் மற்றவர்களுக்குள் வெறுப்பே வந்துவிடும். பாலியல் விரக்தியால் விவாகரத்து வாங்கி பிரிந்த கதைகள் ஏராளம்.
மரியாதையே இருக்காது
குடும்ப அமைப்பு மீது தமிழர்களுக்கு மதிப்பு ரொம்ப இருக்கும். உற்றார் உறவினர் சுற்றத்தாரின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் அளவில் திருமண உறவுடன் குடும்பம் பின்னி பிணைந்துள்ளது. ஆனால் தம்பதிகளை பொறுத்தவரை ஒருத்தரின் உணர்வை மற்றவர் மதிக்காவிட்டாலும், புரிந்து கொள்ளாவிட்டாலும் விரக்தி வர ஆரம்பிக்கும். பாலியல் விரக்தி வந்தாலே குடும்ப உறவு, திருமணம் குறித்த மதிப்பீடு குறையும். 'எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சு என் வாழ்க்கையே கெடுத்துட்டாங்க' என குடும்பத்தினர் மீது கூட கோபம் திரும்பும். தன் துணை மீதான மரியாதை, திருமண வாழ்க்கை மேல் வைக்க வேண்டிய நம்பிக்கையே சிதைந்துவிடும்.
இதையும் படிங்க: எப்போது செக்ஸுக்கு கண்டிப்பா 'நோ' சொல்லனும்.. குறிப்பாக யாருக்கு சொல்லணும் தெரியுமா?
தனிமையே...தனிமையே..!
திருமணம் ஆன பிறகு திருப்தியான உறவு முக்கியம். அது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும். ஆனால் அது கிடைக்காவிட்டால் பாலியல் விரக்தி அடைவோம். பாலியல் விரக்திக்கு ஆளாகும் ஒருவர் குற்ற உணர்ச்சி அதிகம் கொள்கிறார். தான் தனிமையாக இருப்பது போல உணர்வது அவர்களை சிக்கலுக்கு இட்டுச் செல்கிறது. வீட்டிலேயே கணவர் இருந்தால் கூட உடல் ரீதியான ஈடுபாடு இருவருக்குள்ளும் வராவிட்டால் தனியாக இருந்தாலே போதும் என நினைத்துவிடுகிறார்கள். இதனால் மனரீதியான அழுத்தம் தான் ஏற்படும்.