என் நண்பனை கல்யாணம் பண்ணி.. ஆனா இப்போ வரைக்கும் அவன் மேல லவ் வரல.. விட்டுட்டு போக தோனுது! வாசகிக்கு பதில்

First Published | Mar 8, 2023, 3:27 PM IST

காதல் திருமணங்கள் எல்லா நேரங்களிலும் இனிப்பாக மட்டும் இருப்பதில்லை. 

இல்லற வாழ்வில் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியாக இருப்பது அவசியம். ஒருவரின் தியாகத்தால் மற்றொருவர் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எந்த விதிகளும் எழுதப்படவில்லை. இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான எல்லா உரிமைகளும் அவர்களுக்கு இருக்கிறது. இங்கு திருமணத்திற்கு பிறகு மனக் குழப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் வாசகியின் கேள்வியையும் அதற்கான பதிலையும் காணலாம். 

வாசகியின் கேள்வி:"எங்களுடையது காதல் திருமணம் என்றாலும், நான் ஒருபோதும் என் கணவரை காதலிக்கவில்லை. பெற்றோர் விருப்பத்திற்கிணங்க நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அவர் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவர். காதலிக்காமல் அவரை திருமணம் செய்துவிட்டு, அந்த பொய்யோடு இப்போதும் வாழ்வது வாழ்க்கையை வெறுப்பாக்குகிறது. பொருளாதார ரீதியில் எனக்கு எந்த குறையும் இல்லை. என் நண்பர்களை விடவும் நல்ல நிலைமையில் இருக்கிறேன். இந்த அன்பு இல்லாத வெற்று கண்துடைப்பு திருமண உறவில் இருந்து நான் விலகலாமா?" என முடித்திருக்கிறார் வாசகி. அவருக்கு நம் நிபுணரின் பதிலை காணலாம்.

Tap to resize

நிபுணரின் பதில்:" திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல.. அது ஒரு அமைப்பு போல செயல்படுகிறது. இங்கு ஒருவரை ஒருவர் நட்புணர்வுடன் புரிந்து கொண்டு பலம், பலவீனம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க முடியும். இருவருக்கும் குடும்பத்தை வளர்ப்பதில் ஆர்வம் இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்ளும் அன்பு இருக்க வேண்டும். 

எந்த உறவாக இருந்தாலும் மனக்கசப்புகள், சண்டைகள் ஏற்படத்தான் செய்யும் ஆனால் அங்கு ஒருவர் மீது ஒருவருக்கு அன்பும் அக்கறையும் இருந்தால் மட்டுமே அந்த உறவும் நிலைபெற்று இருக்கும். உங்களுடைய துணையிடம் உங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுங்கள். அவர் உங்களுடன் உடன்பட்டால் தகுந்த முடிவுகளை இணைந்து எடுக்கலாம். 

இதையும் படிங்க: செக்ஸ் சாதாரணமா கிடைக்காது..இந்த கேள்விகளுக்கு பதில் இருந்தால்.. தாரளமா செக்ஸ் வச்சிக்கோங்க..!

நீங்கள் பிரிய ஆசைப்பட்டு, ஒருவேளை உங்கள் கணவருக்கு உங்களுடன் வாழ விருப்பம் இருந்தால் அது குறித்து பேசி முடிவெடுங்கள். உங்களுடன் திருமண உறவை தொடர அவருக்கு ஏதேனும் பிடிப்புள்ள நல்ல காரணம் இருந்தால், அதை கொஞ்சம் சிந்தித்து பார்க்கலாம். நிராதரவாக உறவை விட்டு செல்வதை விடவும், உறவின் விரிசல்களை சரி செய்ய முயல்வது நல்ல தீர்வாக இருக்கும். ஆனால் சுத்தமாக உங்கள் கணவரிடம் மனைவியாக நடந்து கொள்ளவோ, பழகவோ முடியாவிட்டால் நிலைமையை விளக்கி பிரிந்து விடுங்கள். தேவைப்பட்டால்... உங்கள் கணவருக்கு யதார்த்தத்தை புரிந்து கொள்ள உதவும் வகையில் திருமண ஆலோசகரை நாடுங்கள். 

மேலும் இந்த திருமண உறவை நீங்கள் தொடர போகிறீர்களா? இல்லையா என்பதைத் தீர்மானிப்பது முக்கியம். ஏனெனில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதை விரும்புவதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. எந்த ஒரு உறவையும் விட்டு விலகுவது எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு பிரிவும் வேதனை அளிக்கக்கூடியது. அதே நேரம் அன்பு இல்லாத திருமணத்தில் இருப்பதும் வேதனையை தரக்கூடியது.

உறவுகளில் பொய்யை நாம் ஆதரிக்கவே கூடாது. உண்மைகள் இல்லாத உறவில் வாழ்வது ரொம்பவும் கடினம். அன்பு இல்லாத பட்சத்தில், பொய்யான பிம்பத்தில் நம் துணையை ஏமாற்றுவது நல்ல விஷயம் அல்ல. இது குறித்து உங்கள் துணையுடன் முதலில் பேசுங்கள்...

இதையும் படிங்க: அம்பானி வீட்டில் இப்படி நடக்குதா? கிட்டத்தட்ட 600 பணியாளர் வச்சு பராமரிக்கும்..பிரமாண்ட மாளிகையின் உண்மை முகம்

இதையும் படிங்க: அம்மாவின் காதல்.. 'அந்த காட்சியை' நேரில் கண்டு பதறிய மகன்... சின்ன வயதிலும் நிதானமாக யோசித்து எடுத்த முடிவு..!

Latest Videos

click me!