orgasm: செக்ஸ் நிபுணரிடம் அந்த விஷயம் பத்தி கேட்கும் 3 கேள்வி - பதில்கள்.

First Published Mar 20, 2023, 5:13 PM IST

துணை இல்லாமல் தனியாக வாழும் நபர்கள் பாலியல் நிபுணரிடம் கேட்கும் 3 கேள்விகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

காதலில் விழுந்து காமத்தில் திளைத்தவர்களுக்கு கூட சந்தேகம் இருக்கும். இந்நிலையில் அந்த உறவுக்குள் செல்லாதவர்களுக்கும், சென்று பிரேக் -அப் ஆகி திரும்பியவர்களுக்கும் சில சந்தேகங்களும் குழப்பங்களும் இருக்கும் தானே. அதனால் பாலியல் நிபுணரிடம் சிலர் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் காண செல்கின்றனர். அப்படிப்பட்ட 3 கேள்விகளை இங்கு காணலாம். 

கேள்வி 1: என்னால் ஏன் உச்சக்கட்டத்தை அடைய முடியவில்லை? 

இதற்கு பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். சுய இன்பத்தில் உச்சக்கட்டம் வருகிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பதில், ஆம் எனில், அவர் துணையோடு உடலுறவில் ஈடுபடும்போது ஏன் உச்சக்கட்டம் வரவில்லை என்பதை அறிந்து கொள்ள பாலியல் நிபுணரை நாடுகிறார். அடிக்கடி இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதாம்.

கேள்வி 2; ஏன் அடிக்கடி உடலுறவு கொள்ள வேண்டும்? 

மக்கள் தங்களுடைய பாலியல் ஆசைகள் மற்றவர்களுடன் ஒப்பிட்டு கொள்கின்றனர். ஆனால் பாலியல் உறவு ஒவ்வொருவரின் விருப்பம் சார்ந்தது. அடிக்கடி செக்ஸ் உறவு கொள்ளுதல் என்பது இருவரின் விருப்பம். கட்டாயம் உறவு கொள்ள வேண்டும் என்பதில்லை. அதிக முறை அல்லது அடிக்கடி உடலுறவு கொள்ள விரும்புவதால், தாங்கள் செக்ஸ் அடிமையா என்று பாலியல் நிபுணரிடம் கேட்கிறார்கள். ஒருவரின் உடலுறவுக்கான விருப்பம், சில வரையறைகளை பூர்த்தி செய்யாத வரையில் அதை ஒரு போதை என்று முத்திரை குத்த முடியாது. அதாவது செக்ஸ் வைத்து கொள்ளாவிட்டால், "என் உலகமே அழிந்துவிடும்.." என தாங்கயியலாத உணர்வுகளுடன் போராடுவது தான் அடிமைத்தனத்தின் கீழ் வரும். 

கேள்வி 3: செக்ஸ் கொள்ளும் போது ஏன் அந்தரங்க உறுப்பில் ஈரமாக (wet) உணருவதில்லை? 

இந்த கேள்வி பலராலும் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பயம், மன அழுத்தம், நீரிழப்பு, ஹார்மோன்கள், மருத்துவக் காரணங்கள், நீங்கள் எடுத்து கொள்ளும் மருந்துகள் ஆகியவை காரணமாக இருக்கலாம். அதுமட்டுமில்லாமல், மூளையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அது உங்கள் பாலின உறுப்புகளை (அந்தரங்க உறுப்பு) பாதிக்கலாம். 

இதையும் படிங்க: ஆணுறுப்பு சைஸ் பத்தி கவலையா? அதை உடனே பெரிதாக்க 1 சூப்பர் வழி இருக்கு

உடல், பிறப்புறுப்பு, மூளை ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டுள்ளன. உங்களுடைய மூளையின் ஒரு பகுதி உடலுறவின்போது 'இது' வலிக்கப் போகிறது அல்லது 'இது' பாதுகாப்பானது அல்ல' என சொன்னால், உங்கள் உடலில் மாற்றங்கள் நிகழப் போவதில்லை. நீங்கள் உச்சக்கட்ட இன்பத்தை உணருவதில் சிக்கல் வரும். முழுமனதுடன் இன்பமாக உறவு கொள்ளும்போது அந்தரங்க உறுப்பு ஈரமாகலாம். அப்படி நடக்காவிட்டால் மருத்துவரை அணுகுங்கள். 

இதையும் படிங்க: மறந்தும் கடன் வாங்க கூடாத நாட்கள்.. மீறி வாங்கினால் கடன் சுமை தீராமல், அட்டை போல ஒட்டிக் கொள்ளும்!

click me!