உடலுறவு முடிந்ததும் உங்களுடைய சிந்தனை எப்படி இருக்கும்?

First Published | Jan 11, 2023, 2:02 PM IST

உடலுறவு கொண்ட பிறகு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு எண்ணங்கள் ஏற்படுகின்றன. அதில் குறிப்பிட்ட 5 விசித்திரமான சிந்தனையை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உடலுறவுக்குப் பிறகு பலரும் சிறிது நேரம் தங்களுடைய பார்டனரின் அரவணைப்பில் கூடுதலாக நேரம் செலவிட விரும்புவர். மற்றொரு தரப்பினர் உடலுறவுக்குப் பிறகு துணையுடன் முத்தமிடவும், கொஞ்சி மகிழ்ந்தவுடன் விரும்புவார்கள். ஒருசிலர் விரைவாக அந்த  அறையை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த மூன்றுமில்லாமல் உடலுறவுக்கு பின் நன்றாக தூங்குபவர்களும் உண்டு. பொதுவாகவே, உடலுறவுக்குப் பிறகு பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன.

நமக்கு முழுமையான பாலியல் உணர்வு ஏற்பட்டவுடன் அது மனதையும் உணர்ச்சிகளையும் புத்துணர்ச்சி அடையச் செய்கின்றன. இதை நம்மை பல்வேறு சிந்தனைகளுக்கு உட்படுத்துகின்றன. அந்த வகையில் உடலுறவு முடிந்ததும் ஆண்கள் மற்றும் பெண்களிடையே நிலவும் சிந்தனை குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

அரவணைப்பு

பொதுவாக பெண்கள் தங்களுடைய துணையுடன் ஏற்படும் உடலுறவுக்கு பிறகு, தன் துணையுடன் அதிகமான நெருக்கத்தை உணர்கின்றனர். அதற்காக அவர்களை அரவணைத்துக் கொண்டு நீண்ட நேரம் பேசுவது, தனது விருப்பங்களை பகிர்ந்துகொள்வது, தனது விரல்களால் துணையின் உடலை வருடுவது போன்ற செயல்பாடுகளை பெண்கள் விரும்புகின்றனர். இதன்மூலம் அந்த ஆணின் மீதான பெண்ணுக்கு இருக்கும் நம்பிக்கை வெளிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

இதையும் படிங்க; உங்க வாழ்க்கைத் துணையோட உடலுறவு வெச்சிக்க முடியலயா? அப்படினா இந்த விஷயம் உங்களுக்கு ரொம்ப முக்கியம்!


விசித்திரம்

ஒருசிலருக்கு உடலுறவில் ஈடுபடும் போது உடலும் மனமும் நன்றாக இருக்கும். ஆனால் உச்சநிலையை அடைந்ததும், மனதில் சங்கடங்கள் தோன்ற ஆரம்பிக்கும். ஏதோ தவறு செய்துவிட்ட உணர்வுகளை அவர்களுக்குள் ஏற்படுத்தும். இதுபோன்ற சிந்தனைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்குமிடையில் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் உடலுறவு முடிந்ததும், இதுபோன்ற எண்ணங்கள் கொண்டவர்கள் உடனடியாக தனது துணையை விட்டு சற்று ஒதுங்கி படுத்துக்கொள்வார்கள். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்கள் சகஜ நிலையை அடைவார்கள்.

மன அமைதி

குறிப்பிட்ட சிலருக்கு உடலுறவை தொடர்ந்து தன் துணையின் அரவணைப்பில் இருக்க பிடிக்காது. இதனால் அவர்கள் தனியாக நேரம் செலவிட முயலுவார்கள்.   அப்போது  நாளை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தனது சிந்தனையை மாற்றுவார்கள்.  இப்படிப்பட்டவர்களுக்கு உடலுறவு அமைதியை தரக்கூடிய செயல்பாடாக இருக்கும். அதனால் நாளை செயல்பாடு தொடர்பான சிந்தனைக்கு அவர்களால் செல்ல முடிகிறது. இதன்மூலம் முக்கியமான காரியங்கள் குறித்து தெளிவாக முடிவெடுக்க முடிகிறது.

கேள்விகள்

உடலுறவு முடிந்தவுடன் தனது துணை திருப்தியாக உணர்ந்தாரா, உடலுறவில் அவருக்கு மகிழ்ச்சி கிடைத்ததா என்பது குறித்து பலரும் சிந்திக்கின்றனர். இது ஆண்கள் மற்றும் பெண்களிடையே பொதுவாக நிலவுகிறது. இதுதொடர்பான கேள்வியை தங்கள் துணையிடம் நேரடியாகவும் கேட்கமாட்டார்கள். அதனால் அந்த சிந்தனையுடன் அவர்கள் உறங்கச் சென்றுவிடுவார்கள்.

தூய்மை

உடலுறவுக்குப் பிறகு, தனது துணையின் தூய்மையைப் குறித்து சிந்திக்கும் பழக்கம் பலரிடையே நிலவுகிறது. துணையின் பற்கள் சுத்தமாக இருந்ததா? இன்று தன் துணை முறையாக குளித்தாரா? ஒருவேளை துணை சுத்தமாக இல்லை என்றால் தான் என்ன செய்வது? பாதுகாப்பில்லாமல் உறவுகொண்டதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமா? என்கிற அச்சம் தரும் கேள்விகளை பலரும் சிந்திக்கின்றனர். இதுபோன்ற கேள்விகள் பொதுவாக பெண்கள் மத்தியில் அதிகம் எழுவதாக ஆய்வு கூறுகிறது.

இதையும் படிங்க; பெண்களை இப்படி கிஸ் அடிச்சா சொக்கி போவாங்க.. இதை ட்ரை பண்ணி பாருங்க!

Latest Videos

click me!