உடலுறவு கொள்வதால் கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கிறது. இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாக இருக்கும்போது மனக்கசப்புகள் குறைகிறது. ஆனால் உடலுறவு கொள்வதில் சில குழப்பங்கள் நிலவுகிறது. அடிக்கடி உடலுறவு கொள்ளலாமா? தினமும் உடலுறவு கொண்டால் பாதிப்பு ஏற்படுமா? என்பது போன்ற குழப்பங்கள் அவை. உடலுறவு வாழ்வதற்கான ஆரோக்கியமான வழிமுறைதான். அதை தினமும் செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை.
பாதுகாப்பான செயல்:
தினமும் உடலுறவு கொள்ளும் போது பாதுகாப்பற்ற பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற முறைகள் உறவிக் ஈடுபடுவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது. பல துணைகளுடன் உறவில் ஈடுபடும் போது, அதாவது துணையில் ஒருவருக்கு பல செக்ஸ் பார்ட்னர் இருந்தால் அல்லது இருவருமே பல செக்ஸ் துணைகளை கொண்டிருந்தால் பரவும் பாலியல் நோய்கள் மற்றும் தேவையற்ற கர்ப்பம் ஏற்படுவதற்கான அதிக ஆபத்துள்ளது.
இதய நோய்:
பல்வேறு ஆய்வுகளின் தகவல்களின்படி, வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் உடலுறவு வைத்து கொள்பவர்களுக்கு இருதய நோய் அபாயம் குறைவு. அதுமட்டுமின்றி உடலுறவு நல்ல உடற்பயிற்சியாகவும் உள்ளது. ஆனாலும் சில அறிகுறிகள் இருக்கும்போது உடலுறவு கொள்ளக் கூடாது. மார்பு வலி, சுவாசிப்பதில் சிக்கல், சீரற்ற இதயத் துடிப்பு, அஜீரண கோளாறு இருந்தால், உடலுறவு வைக்க வேண்டாம்.
மன அழுத்தம்:
தினமும் உடலுறவு கொள்வதால் உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. இது நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கும். மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது. இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கும் நல்லது. உடலுறவு கொள்ளும் போது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அந்த சமயங்களிக் டீஹைட்ரோபியாண்ட்ரோஸ்டிரோன் என்னும் ஹார்மோனை வெளியிடப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: குண்டா இருப்பதால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்குதா? உங்க பாட்னர் கூட இந்த 4 விஷயங்களை ட்ரை பண்ணுங்க!
எப்போது உடலுறவு வைக்க கூடாது?
உங்களுக்கு உடல் நலம் சரியில்லை எனில் உடலுறவு வைக்காதீர்கள். தினமும் உடலுறவு கொள்வது உடலின் உள்ளுறுப்புகளை சரிசெய்ய உதவாது. உடலுறவில் ஈடுபடும் முன், பிறப்புறுப்பை சுற்றியுள்ள சருமத்தை சுத்தமாக வைக்க வேண்டும். அங்கு தொற்று இருந்தால் அது குணமடைய நேரம் கொடுங்கள்.
ஏனென்றால் அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் தம்பதிகளுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் வருகின்றன. அடிக்கடி உடலுறவு வைப்பது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது. கவனமாக உடலுறவு வைத்து நலம் வாழுங்கள்.
இதையும் படிங்க: ஆறு மனைவிகளுடன் கொண்டாட்டமாக வாழும் ஆர்தர் ஓ உர்சோ!! பிட்னஸுக்கு என்ன பண்றாரு தெரியுமா?