திருப்தியான உடலுறவை இப்படியும் கண்டுபிடிக்கலாம்.. இதை பத்தி தெரியுமா?

First Published | Jan 13, 2023, 2:25 PM IST

உடலுறவு கொள்ளும்போது கிளர்ச்சி அதிகமானால் உடலை இறுக அணைப்பதும், நகக்கீறல்கள் விழுவதும் இயல்பாக நடக்கும். இதோடு தன்னிச்சையாக நிகழும் இன்னொரு விஷயம் குறித்து இங்கு காணலாம். 

உடலுறவு கொள்வது தம்பதியினரை இன்னும் பிணைப்பாக வைக்கும். காதல் இல்லாத வாழ்க்கை வெறுமையாவது போலவே காமம் இல்லாத நாள்களும் கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். இந்த உறவு பலமாக உரையாடல்கள் அவசியம். முந்தைய நாள் நடந்த உறவு குறித்து மறுநாள் கலந்து பேசுவது, உச்சம் அடைந்த தருணத்தை பகிர்ந்து கொள்வது உறவில் கூடுதல் புரிதல் ஏற்படுத்தும். சிலர் உறவு வைத்து கொள்ளும்போது முனகல் ஒலியை எழுப்புவர். உச்சம் அடையும்போது தான் அந்த சத்தம் அதிகமாக எழும். அந்த சத்தம் எதனால் என்பது குறித்து இங்கு காணலாம். 

உடலுறவில் ஒவ்வொரு படிநிலைகளாக அனுபவிக்கும்போது தான் முனகல் ஒலி சாத்தியப்படும். உறவின்போது ஒருவர் உடலை ஒருவர் தொட்டு உணர்ந்து ஆராதிக்கும்போது ஏற்படும் கிளர்ச்சி இதை சாத்தியப்படுத்தும். இப்படி முனகல் ஒலி எழுப்புவது சிறந்த உடலுறவுக்கான அறிகுறி, உடலின் மீது கட்டுபாடு இல்லாத அளவிற்கு மதி மயங்கும்போது தான் அந்த ஒலி ஏற்படும் என்கின்றனர், பாலியல் நிபுணர்கள். உடலுறவில் இயல்பாகவே முனகல் ஒலி வருவது திருப்தியான உடலுறவின் அடையாளம். 

இதையும் படிங்க: உடலுறவு வேண்டாம்னு விலகினால் இவ்வளவு பிரச்சனையா?


உடலுறவின்போது முனங்கும் சத்தத்தை கொண்டு உங்களுடைய இணையர் அந்த உறவில் இன்பமாக இருக்கிறாரா? இல்லையா? என்பதை கூட கண்டறியலாம். எந்த இடத்தில் தொடுவதை அவர் அதிகம் விரும்புகிறார், எது அவருக்கு அதிகமான கிளர்ச்சியை உண்டு பண்ணுகிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்றது போல் உறவு வைத்துக் கொள்ளலாம். 

முனகல் சத்தம் ஒருவருக்கொருவர் இன்னும் உறவில் ஆழமான உறவை ஏற்படுத்தும். தங்கள் இணையரை இன்பமாக்கும் முயற்சிகள் தீவிரமாகும். ஒருவரின் முனகல் ஒலிக்கு மற்றொருவர் இசைந்து உறவில் குலைந்துவிடுவர். உறவில் உச்சக்கட்டம் வந்த பிறகு அந்த சத்தம் மெல்ல குறையும். மீண்டும் அந்த சத்தம் கேட்க செவிகள் விரும்பினால் பார்ட்னரிடம் கேட்டு மீண்டும் தொடங்கலாம்.  

இதையும் படிங்க: பெண்களை மயக்கும் இந்த முத்தங்கள் பத்தி தெரியுமா?

சிலர் தங்களுடைய பார்ட்னர் மனம் திருப்தி கொள்ள போலியாகவும் முனகல் ஒலியை எழுப்புகின்றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. போலியான முனகல் ஒலி எழுப்ப சில காரணங்கள் உள்ளன. தங்கள் இணையின் முனகலை கேட்டு சிலர் இன்னும் வேகமாக இயங்கும் இயல்பு கொண்டவர்களாக இருப்பதாலும் இந்த போலி முனகல் வாடிக்கையாகிவிட்டது. 

சிலர் உறவு வைத்துக் கொள்ளும் போது முணுகுவதை விரும்பமாட்டார்கள். அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் சிலர் முனகுவது பிடித்தாலும் வெட்கத்தில் சத்தம் எழுப்ப தயங்குவார்கள். அவர்களுக்கு அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்கலாம். முனக வேண்டும் என ஆசையிருப்பவர்கள் ஏதேனும் உணவை சுவைத்து உண்ணும் போது சத்தம் எழுப்பி முனகலை இயல்பாக்கலாம். முனகுதல் உறவில் உச்சமடைய வைக்கும் காரணி என்பதால் முயன்று பாருங்கள். 

இதையும் படிங்க: கன்னித்தன்மையை இழந்த பெண்களுக்கும் முதலிரவில் ரத்தம் வரும்! இந்த மாத்திரையை பத்தி தெரியுமா?

Latest Videos

click me!