5 கிலோ தக்காளி 100 ரூபாய் தானா.? கோயம்பேட்டில் காய்கறி விலை என்ன தெரியுமா.?

First Published | Aug 21, 2024, 7:50 AM IST

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலையில் சில வகைகள் குறைந்துள்ளன. தக்காளி விலை உச்சத்தில் இருந்து தற்போது குறைந்து வருகிறது. வெங்காயம், இஞ்சி போன்ற சில காய்கறிகள் அதிக விலையில் விற்பனையாகிறது.

பீன்ஸ் ஒரு கிலோ என்ன.?

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலையானது சற்று குறைந்துள்ளது.  அந்த வகையில் காலிஃப்ளவர் ஒன்று 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ  50 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

வெண்டைக்காய் விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கிருஷ்ண ஜெயந்தி தின தொடர் விடுமுறை.! சிறப்பு பேருந்து அறிவிப்பு.! எங்கே இருந்து எங்கே தெரியுமா.?

Tap to resize

பீர்க்கங்காய் விலை என்ன.?

பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சௌசௌ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வாழைத்தண்டு ஒரு துண்டு 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

தக்காளி விலை நிலவரம் என்ன.?

பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், தக்காளி விலையானது உச்சத்தில் இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது, அந்த வகையில் ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!