பிற நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்திய உணவுகள் இவையே..!!

First Published | Aug 20, 2024, 12:56 PM IST

Indian Foods Banned Abroad : இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சில உணவுகள் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது அது என்னென்ன உணவுகள் என்று இங்கு பார்க்கலாம்.

உலகம் முழுவதிலும் வெவ்வேறு பகுதிகளிலும் இருக்கும் ஒவ்வொரு உணவுகளும் மிகவும் பிரபலமானது. அது அந்த நாட்டில் மட்டுமின்றி, பிற நாடுகளிலும் பிரபலமாக இருக்கும். அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் சில உணவுகள் உலகம் முழுவதிலும் பிரபலமானவை.

இருந்த போதிலும் சில பிரபலமான இந்திய உணவுகள், பிற நாடுகளில் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இப்படி பிரபலமாக இருக்கும் அந்த உணவுகளை வெளிநாடுகளில் காண முடியாது. அது எந்த மாதிரியான உணவுகள் என்று இங்கு பார்க்கலாம்.

Tap to resize

பான் : வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மற்றும் பிற மசாலா பொருட்களால் நிறைந்திருக்கும். இது  இந்தியாவின் பாரம்பரிய தயாரிப்பாகும். இது இந்தியாவில் அதன் செரிமான பண்புகளுக்காகவும், சுவாசத்தை புத்துணர்ச்சியூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் படி, புற்றுநோய் மற்றும் பிற உடல் பிரச்சினைகளை இது அதிக ஏற்படுத்தும் என்று சொல்லுகிறார்கள் எனவே, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமோசா : இந்தியாவில் ஈவினிங் டைமில் அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் இது. ஆனால் இது தென்னாப்பிரிக்காவின் சோமாலியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. காரணம், தென்னாப்பிரிக்காவில் AI Shabaab குழுவிற்கு கிறிஸ்தவர்களின் அடையாளமாக இருக்கும் முக்கோண வடிவத்தில் சமோசா இருப்பதால் தான்.

கசகசா : இது இந்தியாவில் பிரியாணி, குருமா, கறி, குழம்பு போன்றவற்றில் சேர்க்கப்படும் ஒரு முக்கிய மசாலா பொருளாகும். ஆனால் இது சவுதி அரேபியா, தைவான் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது காரணம் இதில் மார்பின் என்ற போதை பொருள் இருப்பதாக சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் தான்.

இதையும் படிங்க:  இண்டியன் ஃபுட் வேண்டவே வேண்டாம்...! எமிரேட்ஸ் விமான நிறுவனம் அடாவடி

கெட்சப் : இந்தியாவில் ஸ்கெட்சப் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் தக்காளி, புளிப்பு என பல வகைவகைகள் உள்ளது. இளைஞர்கள் இது அதிகம் விரும்பி சாப்பிடுவதால் பிரெஞ்சு அரசாங்கம் இதை தடை செய்துள்ளது.

இதையும் படிங்க:  சுவை பட்டியலில் மோசமானதாக மதிப்பிடப்பட்ட ''கஞ்சி'' உண்மையில் சூப்பர் உணவு! ஊட்டச்சுத்துகளின் பொக்கிஷம் கஞ்சி!

நெய் : இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள் இது. இது இந்திய உணவுகளின் சுவையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெண்ணையில் இருந்து தயாரிக்கப்படும் இருப்பதால், இதை சாப்பிட்டால் ரத்த அழுத்தம், உடல் பருமன், மாரடைப்பு போன்ற ஆபத்தான பிரச்சனைகள் வரும் என்பதால் அமெரிக்காவில் நெய் விற்க தடை செய்துள்ளது.

Latest Videos

click me!