தளபதி அவரை சந்தித்தது இதற்குத்தானா? பனையூரில் ரெடியாகும் TVKன் "கொடி அறிமுக விழா" - இரு முக்கிய அப்டேட்!

First Published | Aug 19, 2024, 5:30 PM IST

Thalapathy Vijay : தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Vijay TVK Party

தமிழ் சினிமாவில் கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் தான் தளபதி விஜய். சுமார் 200 கோடி ரூபாய் வரை ஒரு திரைப்படத்திற்கு சம்பளமாக பெற்ற ஒரே நடிகராகவும் இவர் இப்போது திகழ்ந்து வருவதாக சில தகவல்களும் வெளியாகி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது சூசகமாக பேசி வந்த தளபதி விஜய், இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிட்ட முதல் செய்தியே தமிழக வெற்றிக் கழகம் என்கின்ற தனது அரசியல் கட்சி குறித்து தான்.

பணியாளர் தங்கும் விடுதி மத்திய அரசு நிதியா? அண்ணாமலைக்கு பதில் கொடுத்த FACT CHECK

Politician Vijay

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அறிவித்தது அனைவரும் எதிர்பார்த்த விஷயம் தான் என்றாலும், யாருமே சற்றும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை அறிவித்து மாஸ் காட்டினார் தளபதி. அது தான் தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறேன் என்ற தகவல். மக்களுக்கு முழு நேரம் சேவையாற்ற உள்ள நான், ஏற்கனவே ஒப்புக்கொண்ட இரு திரைப்பட பணிகளை மட்டும் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து முழுமையாக விலகுவேன் என்று அறிவித்தார்.

Tap to resize

Tamilaga Vettri Kazhagam

அதுமட்டுமல்லாமல் 2026ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் தனது தமிழக வெற்றிக்கழக கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே கட்சியினுடைய பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தளபதி விஜயின் பனையூர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான 40 அடி கொடிக்கம்பத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு, அக்கட்சியின் கொடி மக்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

TVK Vijay

அதுமட்டுமல்லாமல் கொடி அறிமுகம் செய்யப்படும் அதே நாள், கட்சிக்கான பாடலும் வெளியாகும் என்றும், அந்த பாடலுக்கு வரிகள் எழுதியது பிரபல பாடல் ஆசிரியர் விவேக் என்றும், அந்த பாடலுக்கு இசையமைத்தது தமன் என்றும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பாடலாசிரியர் விவேக் வீட்டு விசேஷத்தில் பங்கேற்றார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடல் குறித்து அந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு வில்லுக்கும் ஒரு துப்பாக்கி, ஒவ்வொரு பீஸ்டுக்கும் ஒரு GOAT – விஜய் ஹிட் மூவிஸ்!

Latest Videos

click me!