மிகக் குறுகிய காலத்தில், தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக உயர்ந்தவர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத் தலைவர் லலித் குமார். இவர் தளபதி விஜயின் நெருங்கிய உறவினர் ஆவார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த இவர், இதைத் தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தை தயாரித்திருந்தார்.
இவர் தன்னுடைய செவன் ஸ்கிரீன் நிறுவனத்தின் மூலம், காத்து வாக்குல ரெண்டு காதல், கோப்ரா, மகான், உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் லலித் குமாரின் மகன் திருமண வரவேற்பு இன்று நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடந்த நிலையில், இதில் தளபதி விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.