பிக்-அப் ஆன சன்னி லியோனின் பிசினஸ்! வெறும் 10 லட்சம் முதலீட்டில் தொடங்கிய தொழில்.. இன்று 10 கோடி வருமானம்

First Published Apr 24, 2024, 11:28 AM IST

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் 10 லட்சம் முதலீட்டில் தொடங்கிய பிசினஸ் படிப்படியாக பிக்-அப் ஆனதால் தற்போது அவருக்கு ரூ.10 கோடி வருமானம் வருகிறதாம்.

சன்னி லியோனின் பிசினஸ்

நடிகை நயன்தாரா 9ஸ்கின் என்கிற நிறுவனம் மூலம் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவருக்கு முன்னரே கவர்ச்சி நடிகை சன்னி லியோன், அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கி தற்போது அதன்மூலம் ரூ.10 கோடி வருமானம் ஈட்டி வரும் தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த நிறுவனம் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் சன்னி லியோனே பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

10 லட்சம் முதலீடு

ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். கனடாவை சேர்ந்தவரான இவர் ஒரு கட்டத்தில் ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு இந்தியாவில் குடியேறி இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார். அவர் நடத்தி வரும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயர் ஸ்டார்ஸ்ட்ரக். இந்த நிறுவனத்தை வெறும் ரூ.10 லட்சம் முதலீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி இருக்கிறார் நடிகை சன்னி லியோன்.

தொழிலை விரிவுபடுத்திய சன்னி லியோன்

பின்னர் 2019-ம் ஆண்டு தனது தொழிலை விரிவுபடுத்திய அவர், அந்நிறுவனம் மூலம் உள்ளாடைகளையும் விற்பனை செய்ய தொடங்கி இருக்கிறார். இதற்காக அவரது கணவர் டேனியல் வெபரும் சன்னி லியோனுக்கு உதவி இருக்கிறார். Infamous by Starstruck என்ற பெயரில் இவர்கள் தொடங்கிய உள்ளாடை விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தை தொடங்கியதன் பின்னணியில் ஒரு சோகக் கதையும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்... சமந்தாவின் மாஜி கணவர் நாகசைதன்யா உடன் டேட்டிங் சென்றாரா சோபிதா? ஒரே போட்டோவால் மீண்டும் கிளம்பிய காதல் சர்ச்சை

பிசினஸ் தொடங்கியதன் பின்னணியில் உள்ள சோகக் கதை

அதாவது நடிகைகள் விளம்பரங்களில் நடித்து ஏதேனும் முன்னணி நிறுவனங்களின் விளம்பர தூதர்களாக நியமிக்கப்படுவர். அப்படி சன்னி லியோனும் இருக்க ஆசைப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் பாலோவர்கள் வைத்திருந்தாலும் சன்னி லியோனை தங்கள் பிராண்டுக்கு விளம்பர தூதராக போட்டால் அது ஆபத்து என கூறி பல நிறுவனங்கள் அவரை நிராகரித்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் தான் ஏன் நாமே ஒரு நிறுவனத்தை தொடங்கக் கூடாது என்கிற ஐடியா சன்னி லியோனுக்கு வந்துள்ளது. அதன் விளைவாக அவர் தொடங்கியது தான் இந்த Starstruck நிறுவனம்.

சன்னி லியோன் நிறுவனத்தின் ஸ்பெஷல்

தற்போது, ​​ஸ்டார்ஸ்ட்ரக் நிறுவனம் 260க்கும் மேற்பட்ட வெவ்வேறு தயாரிப்புகளை வழங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மேலும் இந்நிறுவனத்தில் இவர்கள் தயாரிக்கும் அழகுசாதனப் பொருட்களுக்காக எந்த விலங்கையும் கொடுமைப் படுத்தவில்லை என்று கூறுகின்றனர். சன்னி லியோனின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் Affetto Fragrances, எனப்படும் வாசனை திரவியங்கள், இந்தியா முழுவதும் 500 க்கும் மேற்பட்ட கடைகளில் கிடைக்கிறதாம்.

வெவ்வேறு தொழில்களில் முதலீடு

ஸ்டார்ஸ்ட்ரக் நிறுவனத்தை உருவாக்குவதற்கான பயணம் மெதுவாகவும் நிலையானதாகவும் இருந்ததாக கூறும் நடிகை சன்னி லியோ அதில் பல ஏற்ற தாழ்வுகள் மற்றும் பல அனுபவங்கள் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் பல வெற்றிகரமான நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார் சன்னி லியோன். அந்த வகையில் 2021ல், PETA-வால் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டான ஐ ஆம் அனிமல் மற்றும் ரைஸ் பார்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்தார் சன்னி லியோன். இதுதவிர, இந்த ஆண்டு பிப்ரவரியில், நொய்டாவில் சிகா லோகா என்ற உணவகத்தையும் சன்னி லியோன் திறந்தார். இப்படி பிசினஸில் கொடிகட்டி பறக்கும் நடிகை சன்னி லியோனின் நிகர மதிப்பு 100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சிறந்த பாடகருக்கான தேசிய விருது வாங்கிய ஒரே நடிகர்.. கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

click me!