Samantha : மயோசிடிஸால் படாதபாடு படும் சமந்தா... படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததால் பதறிப்போன படக்குழு

First Published | Mar 25, 2024, 12:54 PM IST

மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தபோது மயக்கமிட்டு விழுந்ததாக நடிகை சமந்தா கூறி இருக்கிறார்.

Samantha

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் சமந்தா. நாக சைதன்யாவுடனான பிரிவு இவரது சொந்த வாழ்க்கையில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதேபோல் மயோசிடிஸ் நோய் பாதிப்பு சமந்தாவின் சினிமா கெரியரில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. சுமார் ஓராண்டுகள் அதிலிருந்து மீள தீவிர சிகிச்சை எடுத்து வந்த சமந்தா, தற்போது படிப்படியாக கம்பேக் கொடுத்து வருகிறார்.

Samantha Ruth Prabhu

மயோசிடிஸ் நோய் பாதிப்பிற்காக சிகிச்சை பெற சினிமாவில் இருந்து கடந்த சில மாதங்களாக விலகி இருக்கும் சமந்தா, தன் கைவசம் சிட்டாடெல் என்கிற வெப் தொடரை மட்டும் வைத்திருக்கிறார். அந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். வருண் தவான் ஜோடியாக அவர் நடித்துள்ள இந்த வெப் தொடர் விரைவில் அமேசான் பிரைம், ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... விவாகரத்துக்கு பிறகு இதுவே முதன்முறை.. ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா - நாக சைதன்யா.. ஆனால்..

Tap to resize

samantha Myositis

சிட்டாடெல் வெப் தொடரில் நடிக்கும் போது தான் மயங்கி விழுந்தது பற்றி சமீபத்திய பேட்டியில் மனம்விட்டு பேசி இருக்கிறார் சமந்தா. மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட போது தான் சிட்டாடேல் வெப் தொடரில் நடித்து வந்தாராம் சமந்தா. அதில் அதிகப்படியான ஆக்‌ஷன் காட்சிகள் இருந்ததால் டூப் போடாமல் நடித்திருக்கிறார் சமந்தா. படப்பிடிப்பின் போது ஒரு கட்டத்தில் மிகவும் சோர்வடைந்து மயங்கி விழுந்துவிட்டாராம் சமந்தா.

Samantha Fainted during Citadel Shooting

சமந்தா மயங்கி விழுந்ததை பார்த்து பதறிப்போன படக்குழு மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்களாம். அதன்பின்னர் தான் இயல்பு நிலைக்கு திரும்பியதாக நடிகை சமந்தா கூறி இருக்கிறார். மேலும் அல்கேஷ் என்பவர் தான் அந்த சமயத்தில் தனக்கு உறுதுணையாக இருந்து உடல்நிலை தேர்ச்சி அடைய உதவியதாக சமந்தா கூறினார். அவரின் இந்த நிலை குறித்து அறிந்த ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Dhanush: ஓட்டலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு... மீண்டும் இணைகிறார்களா தனுஷ் - ஐஸ்வர்யா? பிரபலம் சொன்ன அப்டேட்

Latest Videos

click me!