Nayanthara Business:
பல நடிகைகள், திரையுலகில் சம்பாதிக்கும் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில் நயன்தாராவை பொறுத்தவரை சீனியர் என்று தான் சொல்லவேண்டும். தென்னிந்திய திரையுலகில் 1 கோடியை எட்டியதும், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய துவங்கி, தற்போது பல தொழில்களை தன்னுடைய கணவர் விக்கியுடன் சேர்ந்து நிர்வகித்து வருகிறார்.
9Skin Product Launch
இதை தொடர்ந்து, ஸ்டாடர் நிறுவனத்தில் முதலீடு, லிப் பாம் நிறுவனம், கேரளாவில் அபார்ட்மெண்ட் கட்டி விற்பனை என, தன்னை பிசியாக வைத்து கொண்டுள்ள நயன்தாரா, 9ஸ்கின் என்கிற பெயரில் புதிய அழகு சாதன நிறுவனம் ஒன்றையும் லாஞ்ச் செய்துள்ளார். கடந்த சில தினங்களாகவே... இந்த பொருட்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புரோமோட் செய்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
nayanthara and Vigneshshivan
இந்நிலையில் நேற்று செப்டம்பர் 29-ந் தேதி இந்த பொருட்களுக்கான விற்பனையை மலேசியாவில் தொடங்கி உள்ளனர். இதற்கான லாஞ்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் நயன்தாரா... வெல்வெட் உடையில், சும்மா தேவதை போல் உள்ளார். விக்கி - நயன் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.