Thirumavalavan: விசிக தலைவர் திருமாவளவன் உயிருக்கு ஆபத்தா? திடீரென பாதுகாப்பு அதிகரிப்பு! நடத்தது என்ன?

Published : Aug 25, 2024, 06:52 AM ISTUpdated : Aug 25, 2024, 06:59 AM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

PREV
14
Thirumavalavan: விசிக தலைவர் திருமாவளவன் உயிருக்கு ஆபத்தா? திடீரென பாதுகாப்பு அதிகரிப்பு! நடத்தது என்ன?
Armstrong Murder

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழகத்தில் பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

24
Thirumavalavan

ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே திருமாவளவன்  உள்ளிட்ட பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பை  அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தனக்கும், திருமாவளவன், கிருஷ்ணசாமி, சீமான் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இதையும் படிங்க: DMK: அமைச்சர் ராஜகண்ணப்பன் மகனுக்கு திமுகவில் முக்கிய பதவி!

34
Viduthalai Chiruthaigal Katchi

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகாரிக்கப்பட்டுள்ளது. அதாவது திருமாவளவனுக்கு எப்போதும் (பிஎஸ்ஓ) எனும் தனி பாதுகாவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக இன்னொரு பிஎஸ்ஓ மற்றும் ஒரு காவலர் என மொத்தம் 2 பேர் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளனர்.

44
intelligence Alert

இதனால் திருமாளவனின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு திடீரென அதிகரிக்க முக்கிய காரணம் என்பது உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையே காரணம் என கூறப்படுகிறது

Read more Photos on
click me!

Recommended Stories