DMK: அமைச்சர் ராஜகண்ணப்பன் மகனுக்கு திமுகவில் முக்கிய பதவி!
திமுகவில் முக்கிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் தலைவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படுவது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் மகனுக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
Karunanidhi
திமுகவில் மட்டும் ஒரே நேரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் முக்கிய பொறுப்புகள் மற்றும் பதவிகள் வழங்கப்பட்டதை எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். திமுக தலைவர் மற்றும் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவரது மகனான மு.க.ஸ்டாலினுக்கு மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்ற பொறுப்புகளை வழங்கினார். தனது மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கினார்
Dayanidhi Maran
திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவை தொடர்ந்து திமுக தலைவர் பதவியை அடைந்த மு.க.ஸ்டாலின் தனது மகனான உதயநிதிக்கு தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பை வழங்கியுள்ளார். மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் மறைவிற்கு பிறகு தயாநிதி மாறன் மத்திய அமைச்சராகவும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
KN Nehru
அதேபோல் N முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனது மகனான கலாநிதி வீராசாமி, மூத்த அமைச்சராக துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்த், ஐ.பெரியசாமி தனது மகன் ஐ.பி.செந்தில்குமார், அமைச்சர் பொன்முடி தனது மகன் தெய்வசிகாமணி, திமுக பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலு தனது மகன் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன், கே.என்.நேருவின் மகன் அருண் ஆகியோர் திமுகவில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சராகவும், எம்எல்ஏ மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.
Raja Kannappan
இந்நிலையில், புதியதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மகனுக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திமுக மருத்துவ மணி துணைச் செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்ட டாக்டர் வல்லவன் ஒன்றிய கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக டாக்டர்.ஆர்.கே.தீலிப்குமார் திமுன மருத்துவ அணி துணைச்செயலாளராக தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாநில மருத்துவ அணி நிர்வாகிகளுடன் இணைந்து கழகப்பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.