PT Sir
ஹிப்ஹாப் பாடல்களை தமிழ் சினிமாவில் பிரபலமாக்கியவர் ஆதி. ஆரம்பத்தில் சுயாதீன இசைக்கலைஞராக பல்வேறு ஹிப்ஹாப் பாடல்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் ஆதி. அதன்பின்னர் அவரின் திறமையை பார்த்து வியந்த இயக்குனர் சுந்தர் சி, அவரை தான் இயக்கிய ஆம்பள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்படத்தின் பாடல்கள் ஹிட் ஆனதும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் ஆதிக்கு குவிந்தன.
PT Sir Movie Collection
அவர் நடித்த நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு, வீரன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதுமட்டுமின்றி இசையமைப்பாளராகவும் தொடர்ந்து ஜொலித்து வருகிறார் ஆதி. அண்மையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதற்கு ஆதியின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் முக்கிய பங்காற்றி இருந்தன. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் PT சார் என்கிற படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
PT Sir Movie Day 1 Box Office Collection
PT சார் படத்திற்கு இசையமைத்துள்ளதோடு, அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் ஆதி. அப்படம் ஆதி இசையமைத்த 25வது படமாகும். நேற்று PT சார் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. விமர்சன ரீதியாக சற்று கலவையான விமர்சனங்களை அப்படம் பெற்றிருந்தாலும் வசூலில் டீசண்ட் ஆன கலெக்ஷனை அள்ளி உள்ளது. அப்படம் முதல் நாளில் ரூ.1 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் அப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Maanaadu : வடபோச்சே... மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா ரோலில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நடிகர்கள் இத்தனை பேரா?