Car Accident
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள ராமஞ்சேரி சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 7 கல்லூரி மாணவர்கள் சென்னை நோக்கி காரில் வேகமாக வந்துக்கொண்டிருந்தனர். அப்போது ராஜஸ்தான் மாநிலம் சென்றுகொண்டிருந்த கனரக லாரி மீது எதிர்பாராத விதமாக கார் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
College Student
அதில் பயணம் செய்த 7 கல்லூரி மாணவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக உடனே அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை? வெளியான ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!
SRM College Student
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் பிரகாசம் மாவட்டங்களை சேர்ந்த 7 பேரும் சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் சிஎஸ்சி டேட்டா சயின்ஸ் (கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்) 3ம் ஆண்டு படித்து வந்தது தெரியவந்தது. அவர்கள் விடுமுறை நாளான நேற்று காரில் திருவண்ணாமலை மற்றும் ஆந்திராவில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு சென்னைக்கு திரும்பும் போது அதிவேகமாக காரை இயக்கியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது நேருக்கு நேர் அதி வேகத்தில் மோதியதும் தெரியவந்தது.
Police investigation
இந்த விபத்தில் திருப்பதியை சேர்ந்த சேத்தன்(21), யுகேஷ்(21), ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்த நிதீஷ்(21), நிதீஷ்வர்மா (21), ராம்கோபால்(21) ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பதியை சேர்ந்த விஷ்ணு(21), பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த சைதன்யா(21) ஆகியோர் படுகாயமடைகளுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயிலுக்கு சென்று திரும்பியபோது கார் லாரி மீது மோதிய விபத்தில் ல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.