Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை? வெளியான ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!
சென்னையில் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நங்கநல்லூர், மடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் அவ்வப்போது மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Power Cut
நங்கநல்லூர்:
இந்து காலனி பகுதி, என்ஜிஓ காலனி, கேகே நகர், டீச்சர்ஸ் காலனி பகுதி, எஸ்பிஐ காலனி எக்ஸ்ட், ஏஜிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், விஜய் அவென்யூ, எஸ்ஐபி காலனி, லட்சுமி நகர் 4வது ஸ்டேஜ், பிவி நகர் தெற்கு பகுதி, குபேரன் நகர், எல்ஐசி நகர், மயிலை கபாலீஸ்வரர் நகர், பாலாம்பிகை நகர், கற்பகமால் நகர்.
Power Shutdown in Chennai
தாம்பரம் - முடிச்சூர்:
பாரதி அவென்யூ, சித்ரா அவென்யூ, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், காகபுஜண்டர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, சடகோபன் நகர்.
Power Shutdown Today
மடம்பாக்கம்:
ஏஎல்எஸ் நகர் பகுதி ரமணா நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாட தெரு, மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர் பகுதி, அகரம் மெயின் ரோடு பகுதி, வேதாச்சலம் நகர், எஸ்ஆர் காலனி, ஐஏஎஃப் சாலை, ரிக்கி கார்டன், ஹரணி அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சுமேரி சிட்டி.
Today Power Cut
புதுத்தாங்கல்:
பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, சர்வீஸ் சாலை (இரும்புலியூர்)
Chennai Power Shutdown
மிட்டனமல்லி:
ஐஏஎஃப் சாலை, மிட்டனமல்லி காலனி, பிருந்தாவனம் நகர், ராஜீவ் காந்தி நகர், சிஆர்பிஎஃப் குவாட்டர்ஸ், சிஆர்பிஎஃப் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.