ஆவணி மாதம் வரும் அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளில் ஆவணி அவிட்டம் கடைபிடிக்கப்படுகிறது. ஆவணி அவிட்டம் என்று சொன்னாலே எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது பூணூல் மாற்றும் ஒரு நிகழ்வு தான். பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், சூரிய உதயத்திற்கு முன்பாக அதாவது அதிகாலையில் குளித்து நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.