School College Student: மாணவர்களுக்கு ரூ.5000 பரிசுத்தொகை! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
தர்மபுரி மாவட்டத்தில் அண்ணா, பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடக்கிறது. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5,000 வரை பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்று பங்கேற்கலாம்.
TamilNadu Government
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: 2021-2022ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பின் படி தர்மபுரி மாவட்டத்தில் அண்ணா, பெரியார் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டிகள் முறையே, வரும் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
School Student
அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு- வாய்மையே வெல்லும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடக்கிறது. பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான தலைப்பு- தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள், பெரியாரும் பெண் விடுதலையும், வைக்கம் வீரர், சுயமரியாதை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5,000, 2ம் பரிசாக ரூ.3,000, 3ம் பரிசாக ரூ.2,000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
College Student
மேலும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாக தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று, பேச்சு போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.