Anna serial : அண்ணா சீரியல் : பாண்டியம்மாவை வீட்டை விட்டு துரத்த பரணி போடும் பலே பிளான்.. ஒர்க் அவுட் ஆகுமா?

First Published | Apr 3, 2024, 4:26 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ஷண்முகம்  இசக்கிபோட்டோவை எடுத்து வைத்து கொண்டு கண் கலங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ஷண்முகம்  இசக்கி போட்டோவை எடுத்து வைத்து கொண்டு கண் கலங்க அதை பார்த்து எல்லாரும் பதறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ஷண்முகம் அழுவதை பார்த்த தங்கைகள் உனக்காக தான் இந்த போட்டோவை மறைத்து வைத்திருந்தேன் என்று சொல்ல, ஏன்னே அப்படி பண்ணீங்க, இசக்கி இந்த குடும்பத்தோட மகாராணி, நமக்காக தான் அவ அங்க போய் கஸ்டப்படுறா என்று கண் கலங்குகிறான்.

Zee Tamil Anna Serial

மேலும் இனிமே என் தங்கச்சிக்கு எதாவது பிரச்னைனா, அந்த வீட்ல இருக்குற ஒருத்தரையும் உசுரோட விட மாட்டேன் என்று சொல்கிறான். மறுபக்கம் பாண்டியம்மா எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று அடம் பிடித்து கொண்டிருக்க, சௌந்தரபாண்டி சாப்பிட சொல்லி கொண்டிருக்கிறார். அந்த ஷண்முகம் என்ன வந்து மிரட்டிட்டு போறான், உன் பொண்ணு என்னை அறையுறா, உன்ன பார்த்தாலே பயந்திட்டு கிடந்த உன் பொண்டாட்டியும் அந்த இசக்கியும் உன்ன மதிக்க கூட மாற்றாளுங்க, இதையெல்லாம் பார்த்துட்டு நீ என்ன பண்ண என்று கோபப்பட, சௌந்தரபாண்டி கண்டிப்பா எதாவது பண்றேன் அக்கா என்று சொல்லி சாப்பிட சொல்ல, பாண்டியம்மா விடாமல் பேசி கொண்டிருக்கிறாள். 

இதையும் படியுங்கள்... Prabhu deva : நயன்தாராவின் முன்னாள் காதலன் பிரபுதேவா இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? அவரின் NetWorth இதோ

Tap to resize

Anna Serial Update

உடனே சிவபாலன் அதான் சாப்பாடு வேண்டாம்னு சொல்றாங்களே விட வேண்டியது தானே என்று சொல்ல, சௌந்தரபாண்டி இருக்கும் கோபத்தில் சிவபாலனை போட்டு அடித்து துவைத்து எடுக்கிறார். பாண்டியம்மா இவனை அடிக்கிறது பெருசு இல்ல இதே மாதிரி அந்த சண்முகத்தை அடிக்கணும் என்று சொல்கிறாள். 

பிறகு சிவபாலன் அழுது கொண்டிருக்க, பாக்கியம் என்னால் நீயும் கஸ்டப்படுற என்று இசக்கியிடம் சொல்ல, அவள் அண்ணனே வந்து என்னை கூப்பிட்டு இருந்தாலும் நான் உன்னை விட்டு போய் இருக்க மாட்டேன். என் அத்தை இங்க கஷ்டப்படும் போது நான் எப்படி போவேன் என்று பாக்கியத்துக்கு ஆறுதலாக பேசுகிறாள். 

Anna Serial Today Episode

மறுபக்கம் அசந்து தூங்கி கொண்டிருந்த ஷண்முகம் திடீரென அலறி அழ, பரணி என்னாச்சி என்று கேட்கிறாள். அந்த பாண்டியம்மா வந்த பிறகு தான் இவ்வளவு பிரச்சனை, அவ அந்த வீட்ல இருக்க கூடாது என்று சொல்ல, பரணி அவ்வளவு தானே அதுக்கு நான் ஒரு வழி பண்ணுறேன் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Ghilli Re Release : சிங்கம் போல் சிங்கிளாக ரீ-ரிலீஸ் ஆகிறது விஜய்யின் ‘கில்லி’- அதுவும் எப்போ ரிலீஸ் தெரியுமா?

Latest Videos

click me!