நடிகை ஐஸ்வர்யா மேனன், கேரளத்து பெண்குட்டி என்றாலும், அம்மணி வளர்ந்தது, படித்தது எல்லாம் ஈரோட்டு மண்ணில் தான். சிறு வயதிலே நடிகையாக வேண்டும் என்பதை தீர்மானித்து விட்ட இவர் படிக்கும் காலத்திலேயே மாடலிங் செய்ய துவங்கினார்.
பல வருட காத்திருப்புக்கு பின்னர், கடந்த 2016-ம் ஆண்டு வீரா படத்தில் இவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை என்றாலும், அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க தீவிரமாக முயற்சி செய்து வந்தார்.
தமிழ் திரையுலகில் இவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் இதுவரை கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் அடுத்தடுத்து பல இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் எவ்வளவு கவர்ச்சி காட்டும் படி இயக்குனர் கோரிக்கை வைத்தாலும், அம்மணி தயங்காமல் காட்டுவது தான், தெலுங்கில் இவரை முன்னணி இடத்திற்கு அழைத்து வந்துள்ளதாக ஒரு பேச்சும் அடிபடுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D