மூன்று நாளில் 35 மில்லியன்.. மிரட்டிவிட்ட "புஷ்பா" - சந்தோஷத்தில் மிதக்கும் அஞ்சலி!

First Published | Jul 27, 2024, 8:14 PM IST

Anjali : பிரபல நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ள பதிவு ஒன்று, இப்பொழுது மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அது என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

anjali

ஆந்திராவில் பிறந்து தெலுங்கு மொழி திரைப்படங்கள் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகை தான் அஞ்சலி. தமிழில் கடந்த 2007ம் ஆண்டு பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான ஜீவாவின் "கற்றது தமிழ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். தொடர்ச்சியாக தமிழில் இவர் நடித்த பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சாவர்க்கர் தொடர்பான கருத்து; உண்மை தன்மையை அறியாமல் பேசியது தவறு தான் சுதா கொங்குரா விளக்கம்

Kollywood Actress Anjali

குறிப்பாக தமிழ் ரசிகர்கள் அஞ்சலியை பெரிய அளவில் வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது, தனது 18 ஆண்டுகால திரை பயணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் நல்ல திரைப்படங்களை தொடர்ச்சியாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அஞ்சலி. 38 வயதை கடந்துவிட்டார் என்றாலும், இன்னும் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.


Bahishkarna

இறுதியாக தமிழில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான "சைலன்ஸ்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்த நிலையில், தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தின் உருவாகி வரும் "ஏழு கடல் ஏழு மலை" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார். விரைவில் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Actress Anjali

மேலும் நடிகை அஞ்சலி கடந்த சில ஆண்டுகளாக இணைய தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு மொழியில் அவர் நடித்த "Bahishkarana" என்கின்ற இணைய தொடர் OTT தலத்தில் வெளியான 3 நாட்களில் சுமார் 35 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் தான் நடித்த புஷ்பா கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் அஞ்சலி.

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் இருந்து வெளியான எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டர்! வேற லெவல் போங்க!

Latest Videos

click me!