பிறந்தநாள் முடிந்ததும் பிகினி பேபியாக மாறி... ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் வைத்த மாளவிகா மோகனன்

First Published | Aug 6, 2023, 1:59 PM IST

பிறந்தநாள் முடிந்த கையோடு, பிகினி உடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்தபடி நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிகின்றன.

malavika mohanan

கேரளாவை சேர்ந்த நடிகைகளுக்கு தமிழ்நாட்டில் எப்போதுமே மவுசு அதிகம், இதற்கு நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளே எடுத்துக்காட்டு. இந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்திருப்பவர் தான் மாளவிகா மோகனன். இவருக்கு அங்கீகாரம் கொடுத்ததே தமிழ் சினிமா தான். இவரைப்போல ஒரு லக்கியான ஹீரோயின் யாருமே இருக்க முடியாது. ஏனெனில் தமிழில் இவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே ரஜினி மற்றும் விஜய் உடன். 

malavika mohanan

ரஜினியின் பேட்ட படத்தில் கூட சின்ன ரோலில் நடித்திருந்தாலும், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவே நடித்து பல முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் நடிகையாக உயர்ந்துவிட்டார். இதையடுத்து தனுசுக்கு ஜோடியாக மாளவிகா நடித்த மாறன் திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும், அதில் இருந்து மீண்டு வர தங்கலான் என்கிற ஒரு தரமான படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் மாளவிகா. இப்படத்தை பா.இரஞ்சித் இயக்குகிறார்.

இதையும் படியுங்கள்... என் படத்துக்கு யாரும் பிளாக்கில் டிக்கெட் வாங்காதீங்க... ஷூட்டிங் தொடங்கும் முன்பே அலப்பறை கெளப்பும் TTF வாசன்

Tap to resize

malavika mohanan

தங்கலான் படத்திற்காக உடல் எடையெல்லாம் குறைத்து மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் மாளவிகா. தங்கலான் பட ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இதுதவிர பாலிவுட்டிலும் மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதோடு தெலுங்கிலும் பிரபாஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.

malavika mohanan

இப்படி கோலிவுட், பாலிவுட், டோலிவுட், மல்லுவுட் என பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மாளவிகா ஆகஸ்ட் 4-ந் தேதி தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், பிறந்தநாள் முடிந்த கையோடு பிகினி பேபியாக மாறி நடிகை மாளவிகா மோகனன் நடத்தியுள்ள கவர்ச்சி போட்டோஷூட் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், கவர்ச்சி ட்ரீட்டுக்கு நன்றி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 'என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்' ரஜினியை சீண்டும் விதமாக விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Latest Videos

click me!