முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது... தவறான புரிதலால் ஏற்படும் பிரச்சனைகள்! வெளிப்படையாக பேசிய சின்மயி!

First Published | Mar 18, 2023, 12:18 AM IST

முதல் முறையாக, உடலுறவு கொள்ளும் போது... உதிர  போக்கு இல்லை என்றால் அந்த பெண் கன்னி தன்மையை இழந்தவர் என, காலம் காலமாக ஒரு தவறான புரிதல் இருக்கும் நிலையில், இது குறித்து பிரபல பாடகி சின்மயி வெளிப்படையாக பேசியுள்ளார்.
 

சில கருத்துக்களை மருத்துவர்கள் சொல்வதை விட... பிரபலங்கள் சொன்னால் மிக விரைவாகவே அந்த தகவல் மக்களிடம் போய் சேர்ந்து விடும் அந்த வகையில் தான், தற்போது சின்மயி கூறியுள்ள தகவல் மிகவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

marriage

திருமணம் என்பது மிகவும் அழகான... ஆண்டாண்டு காலம் நீடித்திருக்க கூடிய ஒரு உன்னத உறவு. இந்த உறவை மேலும் பலப்படுத்தும் ஒன்று தான் தாமத்யம். இப்படி திருமணம் ஆன தம்பதிகள் முதல் முறை, தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது... சில தவறான புரிதல்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழி வகுத்துவிடுகிறது.

ரஜினிகாந்தை போல்.. ராணாவுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைநடந்துள்ளதா? கண் பார்வை பாதிப்பு! இளம் வயதில் இரு ஆபரேஷன்

Tap to resize

இதுகுறித்து தான் பாடகி சின்மயி வீடியோ ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, முதல் முறை உடலுறவில் ஆண் - பெண் ஈடுபடும் போது, அந்த பெண்ணிற்கு ரத்த போக்கு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், அப்படி ரத்த போக்கு இல்லை என்றால், அவள் கன்னி தன்மையோடு இல்லை என கூறுகிறார்கள்.

அதே போல் பெண்களின் பெண்ணுறுப்பு மிகவும் டைட்டாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள், அப்படி இல்லை என்றாலும் சில பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் பெண்களில் சிலருக்கு மட்டுமே ரத்த போக்கு இருக்கும், பெரும்பாலானவர்களுக்கு அப்படி இல்லை. அதே போல், சில பெண்களுக்கு திரவம் சுரப்பு தன்மை அதிகம் இருந்தால் அவர்களுக்கு வெர்ஜினா டைட்டாக இருக்காது. 

மும்பையில் வீட்டை தொடர்ந்து... அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கிய நடிகர் சூர்யா! விலை மட்டும் இத்தனை கோடியா?
 

doctor

எனவே இதற்கான புரிதல்களை வளர்த்து கொள்ள மருத்துவரை அணுகி, கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதே நேரம் செக்ஸ் பற்றிய புரிதலுக்காக, ஆபாச படங்களை பார்க்க வேண்டும். அது மிகவும் தவறான ஒன்று. செக்ஸ் கல்வி என்பது ஆண் - பெண் இருவருக்கும் அவசியமான ஒன்று என தெரிவித்துள்ளார். சின்மயியின் இந்த வெளிப்படையான பேச்சுக்கு பலர் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!