ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் வாங்குவேன்... ஆனா சொந்த வீடு இல்ல - நடிகை ஷகீலா சொன்ன ஷாக்கிங் தகவல்

First Published | Jun 4, 2023, 12:32 PM IST

மலையாள படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து புகழ்பெற்ற ஷகீலா, ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கியதாக பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. 90-களில் இவர் நடித்த கவர்ச்சி படங்கள் கேரளாவில் சக்கைப்போடு போட்டன. இவர் படங்களுடன் மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் தோற்றுவிடும் என்று தயாரிப்பாளர்களே ஷகீலா படத்துடன் மோத பயந்து ஒதுங்கிப்போன சம்பவங்களும் அரங்கேறின. இதையடுத்து ஷகீலா படத்தில் நடிக்க தடை விதிக்கப்பட்டதால், அவர் தமிழ்நாட்டிற்கு வந்து செட்டில் ஆனார்.

பின்னர் ஆபாச படங்களில் நடிப்பதை தவிர்ந்த ஷகீலா, திரைப்படங்களில் அவ்வப்போது காமெடி வேடங்களில் நடித்து வந்தார். இதையடுத்து கடந்தாண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனக்குள் இருக்கும் சமையல் திறமையை வெளிப்படுத்தினார் ஷகீலா. அந்த நிகழ்ச்சி ஷகீலாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவரை ஷகீலா அம்மா என ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர்.

இதையும் படியுங்கள்... Bommai movie trailer : எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் லிப்லாக் காட்சி உடன்... வெளியானது பொம்மை டிரைலர்

Tap to resize

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஷகீலா, தான் இவ்ளோ நாட்களாக வாடகைவீட்டிலேயே வசித்து வருவது ஏன் என்பது குறித்து பேசி உள்ளார். அதன்படி, விக்கிபீடியாவில் கூறப்பட்டு உள்ளதுபோல் எனக்கு சொந்தமாக வீடு, பி.எம்.டபிள்யூ கார் எதுவும் இல்லை. நான் 40 வருஷமா வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். நான் ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் சம்பாதித்த காலமெல்லாம் இருந்தது.

நான் நடிப்பின் மூலம் நிறைய சம்பாதித்திருந்தாலும், அவற்றையெல்லாம் என் சகோதரி எடுத்து சென்றுவிட்டார். வீட்டில் பணத்தை வச்சிருந்தா வருமான வரி சோதனையில் சிக்கிவிடக் கூடும் எனக்கூறி தான் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன் என வாங்கியவர், என்னை ஏமாற்றிவிட்டார். அதனால் நான் மறுபடியும் பூஜ்ஜியத்தில் இருந்து என் வாழ்க்கையை தொடங்கினேன். தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருவதாகவும் ஷகீலா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... 1 ரூபாய் சம்பளம் கொடுத்த என்.எஸ்.கே... ஒரே நொடியில் அதை 10 ஆயிரமாக மாற்றிய கலைஞர்

Latest Videos

click me!