தன்னுடைய 17 வயதிலேயே மிஸ் சென்னை பேஜெண்ட்டாக... டாப் 3 போட்டியாளர்களின் ஒருவராக தேர்வு செய்ய பட்டவர் சாந்தினி. இதை தொடர்ந்து இயக்குனர் கே.பாக்யராஜ் மகன் சந்தனு ஹீரோவாக நடித்த சிந்து +2 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகிலும் சில படங்களில் இவர் நடித்த நிலையில், அங்கும் வெற்றிபெற முடியாததால் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைய துவங்கிய நிலையில், திடீர் என சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவர் நடித்த தாழம்பூ, மற்றும் ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை பார்த்து ரசிகர்கள் பலர், திருமணத்திற்கு முன்பு கூட இப்படி ஒரு கவர்ச்சியை காட்டியதில்லை என விமார்சனம் செய்து வருகிறார்கள். சாந்தினி, கடந்த 2018 ஆம் ஆண்டு நடன இயக்குனர் நந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.