கவுதம் கார்த்திக்கின் என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தவர் ரகுல் ப்ரீத் சிங். இதையடுத்து கார்த்திக்கு ஜோடியாக தீரன், தேவ் மற்றும் சூர்யாவுடன் என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்த இவருக்கு தமிழை விட டோலிவுட்டில் தான் அதிகளவில் பட வாய்ப்புகள் குவிந்தன.
இதில் அயலான் திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அப்படத்தின் சிஜி பணிகள் முடிவடைந்த உடன் இந்த ஆண்டு தீபாவளிக்கு அப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இதுதவிர இந்தி படங்களையும் கைவசம் வைத்துள்ள ரகுல் ப்ரீத் சிங், தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சேலையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகின்றன.