காஸ்ட்லி கிஃப்டா இருக்கே... பிறந்தநாள் கொண்டாடிய மனைவிக்கு தக்காளியை பரிசாக வழங்கிய பாடகர் வேல்முருகன்

First Published | Aug 3, 2023, 4:04 PM IST

பிரபல நாட்டுப்புற பின்னணி பாடகரும், பிக்பாஸ் பிரபலமுமான வேல்முருகன் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளுக்கு தக்காளியை பரிசாக வழங்கி இருக்கிறார்.

velmurugan

நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் வல்லவரான வேல்முருகன், சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற மதுர குலுங்க குலுங்க என்கிற பாடலை அவர் பாடி இருந்தார். அப்பாடல் இன்றளவும் கோவில் திருவிழாக்களில் தவறாமல் இடம்பெறுகிறது என்றால் அதற்கு வேல்முருகன் குரல் தான் காரணம். அந்த அளவுக்கு காந்தக் குரலை கொண்டவராக இருக்கிறார். 

velmurugan

இதைத்தொடர்ந்து நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா மச்சான் பாடல், ஆடுகளம் திரைப்படத்தில் ஒத்த சொல்லால, காஞ்சனா படத்தில் இடம்பெற்ற சங்கிலி புங்கிலி, கழுகு படத்தில் இடம்பெற்ற ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், எதிர்நீச்சல் படத்துக்காக அனிருத் இசையில் லோக்கல் பாய்ஸ் என இவர் பாடிய பல்வேறு பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. இவர் கின்னஸ் சாதனையும் படைத்து இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை எனக்கும் நடந்துருக்கு..! சீரியல் நடிகை லதா ராவ் ஓப்பன் டாக் !


velmurugan

பாடகர் வேல்முருகன், உலகமெங்கும் பேமஸ் ஆனது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய வேல்முருகன், அதன்பின்னர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து, இவர் தனது மனைவி உடன் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் 2-வது சீசனிலும் கலந்துகொண்டார்.

velmurugan

இந்நிலையில், பாடகர் வேல்முருகன் தன்னுடைய காதல் மனைவியின் பிறந்தநாளுக்கு ஒரு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார். அதன்படி ஒரு கூடை நிறைய தக்காளியை வாங்கி வந்து அதனை தன் மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கி இருக்கிறார் வேல்முருகன். தக்காளி விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்வதை விமர்சிக்கும் வகையில் அவர் இந்த பரிசை வழங்கி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப காஸ்ட்லி கிஃப்டா இருக்கே என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சிங்கம் போல் சிங்கிளாக வரும் ஜெயிலர்... ரஜினிக்கு பயந்து இந்த வாரம் மட்டும் தியேட்டரில் இத்தனை படங்கள் ரிலீஸா?

Latest Videos

click me!