நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக அவர் நடிக்க கமிட் ஆகியுள்ள திரைப்படம் கல்கி. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இதில் பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார். மேலும் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.
24
Nag Ashwin, Kamalhaasan
கல்கி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் நடைபெற்ற காமிகான் மாநாட்டில் வெளியிடப்பட்டது. ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்த டீசர் பாராட்டுக்களை பெற்றது. இந்த காமிகான் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரபாஸ், ராணா ஆகியோருடன் நடிகர் கமல்ஹாசனும் சென்றிருந்தார். அங்கு பேசுகையில் தான் அவர் இப்படத்தில் வில்லனாக நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
காமிகான் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தபோது நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 40 ஆண்டுகால நண்பர் மைக் வெஸ்ட்மோரை சந்தித்தார். இவர் ஒரு ஒப்பனைக் கலைஞர் ஆவார். இந்த சந்திப்பின் போது இருவரும் தங்களது 40 ஆண்டுகால நட்பு குறித்து பேசிக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
44
மைக் வெஸ்ட்மோர் சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான ஆஸ்கர் விருதை வென்றவர் ஆவார். இவரும் உலகநாயகன் கமல்ஹாசனும் இணைந்து 'இந்தியன்', 'அவ்வை சண்முகி' மற்றும் 'தசாவதாரம்' போன்ற படங்களில் பணியாற்றியுள்ளனர். கமலின் இந்தியன் தாத்தா கெட் அப்பிற்கு மேக் அப் போட்டதும் மைக் வெஸ்ட்மோர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.