தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக இருந்து, பாலிவுட் திரை உலகில் நுழைந்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை கைப்பற்றியவர் நடிகை ஸ்ரீதேவி.
ஜான்வி கபூர், ஏற்கனவே மற்ற மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, படங்களின் இந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டுவதால், தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்படும் பாடல் தான் இவருடைய முதல் தேர்வாக இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் மலையாள திரையுலகில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'ஹெலன்' படத்தின் ரீமைக்காக எடுக்கப்பட்ட மிலி படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. இந்த படத்திற்காக முதல் முறையாக தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலேயே ஜான்வி கபூர் நடித்திருந்தார்.
மேலும் விரைவில் தமிழ் திரையுலகிலும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் தீவிர ரசிகையான ஜான்வி கபூர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை 100 முறை பார்த்துவிட்டு, விஜய் சேதுபதிக்கு போன் செய்து அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது.