இடுப்பழகி ரம்யா பாண்டியனை போல் ஒரே போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவை ஸ்தம்பிக்க வைத்த திவ்யா துரைசாமி

First Published | Apr 24, 2023, 10:39 AM IST

ரம்யா பாண்டியன் மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் பிரபலமானதைப் போல் தற்போது திவ்யா துரைசாமியும் லேட்டஸ்ட் போட்டோஷூட் மூலம் பிரபலமாகி உள்ளார்.

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் திவ்யா துரைசாமி. பல்வேறு முன்னணி தமிழ் செய்தி சேனல்களில் பணியாற்றிய இவர், யூடியூப்பில் சினிமா விமர்சனங்களையும் செய்து வந்தார்.

படிப்படியாக மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வந்த திவ்யா துரைசாமிக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்து வந்தது.

Tap to resize

இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய இப்படத்தில் சிறிய கேரக்டர் ரோலில் நடித்திருந்தார்.

இதையடுத்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் விதவிதமாக போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த திவ்யாவுக்கு படிப்படியாக பட வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின.

இவர் கடந்தாண்டு பாண்டிராஜ் - சூர்யா கூட்டணியில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.

அதுவரை கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த திவ்யா துரைசாமி, முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் குற்றம் குற்றமே. சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் திவ்யா.

இதையும் படியுங்கள்... யார நம்புறதுனே தெரியல... ஐபோன் திருடிய நண்பனை கண்டுபிடித்து வெளுத்துவாங்கிய ஷாலு ஷம்மு

இவர் படங்களைத் தவிர கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த மதில் என்கிற வெப் தொடரிலும், 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஃபிங்கர்டிப் சீசன் 2 வெப் தொடரிலும் நடித்திருந்தார்.

தற்போது நடிகை திவ்யா துரைசாமி நடிப்பில் வாழை என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. மாரி செல்வராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதுவரை படங்களில் பெரும்பாலும் ஹோம்லி வேடங்களில் நடித்துள்ள திவ்யா துரைசாமி, போட்டோஷூட்டிலும் பெரியளவில் கவர்ச்சி கட்டாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், தற்போது இடுப்பழகை காட்டி கவர்ச்சி தூக்கலாக இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன.

இந்த போட்டோஷூட் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், திவ்யா துரைசாமியா இது என கேட்கும் அளவுக்கு அவரது இந்த கவர்ச்சி அவதாரம் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பட வாய்ப்புகளை தட்டித்தூக்கவே நடிகை திவ்யா துரைசாமி, இந்த அளவுக்கு கவர்ச்சியில் அதகளம் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... ‘அஜித் - ஷாலினி’ ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய நாள் இன்று

Latest Videos

click me!