சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான பேச்சிலர் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்ய பாரதி.
இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே துணிச்சலான பெண் வேடத்தில் நடித்திருந்த திவ்ய பாரதிக்கு பாராட்டுக்களும் குவிந்தன.
பேச்சிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திவ்ய பாரதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது மதில் மேல் காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவ்வுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் திவ்ய பாரதி. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதுதவிர மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இஷ்க் என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார் திவ்யா.
இவ்வாறு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதைக் கொண்டாடும் விதமாக சமீபத்தில் ஹீரோயின்களின் கனவு தேசமான மாலத்தீவுக்கு சென்று வந்தார் திவ்ய பாரதி.
மாலத்தீவில் பிகினி உடையில் கவர்ச்சி தரிசனம் தந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த அவர் தற்போது மீண்டும் நார்மல் மோடுக்கு திரும்பி உள்ளார்.