divya bharathi
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றிபெற்ற பேச்சிலர் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்ய பாரதி. அப்படத்தில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். இதனால் முதல் படத்திலேயே நடிகை திவ்ய பாரதிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் திவ்ய பாரதிக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளும் அடுத்தடுத்து குவியத் தொடங்கின.
divya bharathi
அந்த வகையில் அடுத்ததாக மதில் மேல் காதல் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் திவ்ய பாரதி. இப்படத்தை வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கி உள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகென் ராவுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விரைவில் ஆரம்பமாகும் பிக்பாஸ் 7! ஆடிஷனில் கலந்து கொண்ட 5 பிரபலங்கள் பற்றி கசிந்த தகவல்.!
divya bharathi
இதுதவிர மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான இஸ்க் என்கிற காதல் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ஆசை படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார் திவ்ய பாரதி. நடிகர் கதிர் தான் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சேரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி.