அப்பா போலவே பல்வேறு திறமைகளுடன் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய தந்தை நடித்த.. தேவர்மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சைன்டிபிக் மற்றும் பொத்தி போதி தர்மன் குறித்து... தமிழக மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட, ஏழாம் அறிவு படத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ருதி ஹாசன்.
தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்த ஸ்ருதி ஹாசன், விஜய்க்கு ஜோடியாக புலி, அஜித்துடன் வேதாளம், சூர்யா உடன் சிங்கம் 3, ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்பித்தார்.
இவர் நடித்த சில படங்கள், எத்ரிபார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்பதால், தெலுங்கு திரைப்படங்களின் பக்கம் கவனம் செலுத்தினார். பின்னர் ஹிந்தி மொழியிலும் மிகவும் கவர்ச்சியான வேடங்களை தேர்வு செய்து பட்டைய கிளப்பினார்.
தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் நடிப்பில், பொங்கல் திருவிழாவின் போது , இவர் நடிகர் பாலையாவுக்கு ஜோடியாக நடித்த வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த வாடல்ட்டர் வீரய்யா ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகி, இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் அடித்தது.
அதே போல் பாகுபலி நாயகன் பிரபாஸ்... கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வரும் சலார் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்ததாக தெரிவித்தார். இந்நிலையில் இவர் கலக்கலான சிகை அலங்காரத்துட, கருப்பு நிற மாடர்ன் உடையில்... எடுத்து கொண்ட கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.