செய்தி வாசிப்பாளர் என்கிற அடையாளத்தோடு, சின்னத்திரையில் அறிமுகமாகி சீரியல் நாயகியாக ஜொலித்த பிரியா பவானி சங்கர் 'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.
கவர்ச்சி காட்டும் நடிகைகளே பட வாய்ப்புகளின்றி தவித்து வரும் நிலையில், துளியும் கிளாமர் இன்றி கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் பிரியா பவானி ஷங்கர்.
இதுவரை இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும், போட்ட முதலுக்கு மோசமின்றி வசூல் செய்துள்ளதால் கோலிவுட்டின் ராசியான நடிகை என்ற அடையாளத்தோடும் பார்க்கப்பட்டு வருகிறார்.
தற்போது தமிழில் மட்டும் நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. இதுதவிர மேலும் சில படங்களிலும் இவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஒரு புறம் நடிப்பில் பிசியாக இருந்தாலும், மற்றொரு பக்கம் சோஷியல் மீடியாவிலும் அம்மணி படு ஆக்ட்டிவாக இருந்து வருவதால், அதில் அவரை பின் தொடர்பவர்கள் ஏராளம்.
சமீபகாலமாக நடிகை பிரியா பவானி சங்கர், கிளாமராக போட்டோஷூட் நடத்தி அதன் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்துகிறார்.
அந்த வகையில் தற்போது பச்சை நிற மாடர்ன் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேற லெவலுக்கு ரசிகர்களிடம் ரீச் ஆகி உள்ளது.