டிக்டாக் மூலம் பிரபலமானவர் மிருணாளினி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் அவர் சின்ன ரோலில் தான் நடித்திருந்தார்.
இதையடுத்து அந்த ஆண்டே சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சாம்பியன் என்கிற திரைப்படம் மூலம் ஹீரோயினாகவும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் மிருணாளினி.
அவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனது எனிமி திரைப்படத்தின் மூலம் தான். அப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும், அதில் இடம்பெறும் டம் டம் என்கிற பாடல் வேறலெலவில் ஹிட் அடித்தது. அந்த பாடலில் வைரல் ஹிட் அடித்ததற்கு மிருணாளினியின் நடனமும் ஒரு காரணம். அதற்காகவே ஏராளமானோர் அப்பாடலை ரிப்பீட் மோடில் கேட்டு ரசித்தனர்.
இதையடுத்து விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்த மிருணாளினி தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் கைவசம் 2 படங்கள் உள்ளன.
இப்படி பிசியாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மிருணாளினி தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பொதுவாக மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் நடிகைகள் அங்கு விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.