மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை ஸ்டார்ட் செய்த கிரண், ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே... தாறு மாறாக ஹிட் அடித்ததால், அடுத்தடுத்து, அஜித், கமல் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களின் நடிக்க துவங்கினார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே... ஓவர் கவர்ச்சி காட்டியதால், பட வாய்ப்புகளை இழக்க நேர்ந்தது. பின்னர் 'வாடியம்மா ஜக்கம்மா' போன்ற ஐட்டம் பாடல்களில் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டார். மீண்டும் எப்படியாவது ஹீரோயின் வாய்ப்பை பிடிக்க வேண்டும் என, தொடர்ந்து கவர்ச்சி புகைபடங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட துவங்கிய கிரண், தற்போது இதன் மூலமாகவே கல்லா கட்டி வருகிறார்.
மேலும் செய்திகள்: சிம்புவை தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனன் அடுத்த ஹீரோ யார் தெரியுமா? உறுதியான தகவல்..!
தன்னுடைய கவர்ச்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட பிரத்தேயேக ஆப் ஒன்றை உருவாக்கி அதில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க மாத... மாதம் குறிப்பிட்ட தொகை வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.