13 வயது சிறுவனுடன் தேனிலவு கொண்டாடிய பெண் ஆசிரியை.. எல்லாம் எதற்கு தெரியுமா ?

By Raghupati RFirst Published Oct 17, 2022, 10:41 PM IST
Highlights

13 வயது சிறுவனை அவனது ட்யூசன் ஆசிரியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது, ‘குற்றம் சாட்டப்பட்ட பெண் பெயர் மங்லிக். அவருக்கு திருமண தோஷம் இருந்து உள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் தன் தோஷம் விலகும் என்று நினைத்து உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இதையும் படிங்க..Google Diwali 2022: தீபாவளிக்கு கூகுள் கொடுத்த அசத்தல் ‘சர்ப்ரைஸ்’! மறக்காம இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!

அவரது பெற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்தும் வசதி இல்லை. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுப்பதாக கூறி பெற்றோரிடம் அனுமதி வாங்கி, சிறுவனை பெற்றோரிடம் இருந்து அழைத்து வந்து உள்ளார். பிறகு திட்டமிட்டபடி தன்னுடைய பிளானை செய்ய ஆரம்பித்துள்ளார். சிறுவனை வீட்டில் வைத்து ஆசிரியர் திருமணம் செய்து கொண்டார்.

மஞ்சள் - மருதாணி வைத்தல் முதல் தேனிலவு சடங்கு வரை நடத்தி உள்ளார். பிறகு தோஷம் போக்க திருமணமாகி 6 நாட்களுக்குப் பிறகு, அவரே விதவை உடை அணிந்து உள்ளார். அவர் தனது கைகளின் வளையல்களை உடைத்துள்ளார். தாலியையும் அகற்றி உள்ளார். கணவர் இறந்துவிட்டார் என உறவினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு, இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க..சாதி பார்க்கும் சசிகலா.? எல்லாத்துக்கும் அதிமுகவின் ‘அந்த’ 4 பேர் காரணம் - புலம்பும் அதிமுகவினர்

பிறகு குற்றம் சாட்டப்பட்ட பெண் ஆசிரியை,  மாணவனை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். அந்த சிறுவன் வீட்டிற்குச் சென்று தன்னுடைய முழு கதையையும் வீட்டில் சொல்ல ​​அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பெண் ஆசிரியை மீது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷ்யா.. பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் உக்ரைன் பெண்கள்! அதிர்ச்சி தகவல்!

click me!