சுகாதார மையத்தில் தனியாக இருந்த செவிலியரின் கைகால் கட்டி நான்கு சிறுவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சுகாதார மையத்தில் தனியாக இருந்த செவிலியரின் கைகால் கட்டி நான்கு சிறுவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தோம் குற்றங்கள் குறைந்தபாடில்லை, காதலிப்பது போல் நடித்து உல்லாசம் அனுபவித்து மோசடி செய்வது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது என எண்ணற்ற வகையில் பெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இந்த வரிசையில் சுகாதார மையத்தில் தனியாக இருந்த செவிலியர் அப்பகுதியை சேர்ந்த 4 சிறுவர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள கொடூரம் நடந்துள்ளது.
முழு விவரம் பின்வருமாறு:- சட்டீஸ்கர் மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் சிப்சிபி என்ற கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. அதில் அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
இதையும் படியுங்கள்: இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பிற்கும் தொடர்பா..? வெளியான அதிர்ச்சி தகவல்கள்
அப்போது அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் நான்கு பேர் அந்த ஆரம்ப சுகாதார மையத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர். அப்போது அங்கு தனியாக இருந்த ஒரு செவிலியரின் வாயை பொத்தி, கை கால்களை கட்டி கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
முன்னதாக நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் அந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த செவிலியர் அவரது பெற்றோரிடம் கூறினார், அதன்பிறகு பெற்றோரின் ஆலோசனையின் பெயரில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: யார் அந்த 4 பேர்..! ஜமேசா முபின் தூக்கி கொண்டு சென்ற மர்ம பொருள் என்ன..? சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை கைது செய்தனர். இதில் 17 வயது குற்றவாளி தலைமறைவாக இருந்து வருகிறார் இந்நிலையில் அந்த சிறுவனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.