16 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 68 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை அவரது மகன் வீடியோ எடுத்து சிறுமியின் தந்தையிடம் காட்டியுள்ளார்.
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவரையும், அதனை மொபைல் போனில் வீடியோ பதிவு செய்த அவரது மகனையும் கைது செய்திருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 20 மற்றும் 30 க்கு இடையில் இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளது. ஆனால், செவ்வாய்க்கிழமை தான் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல்துறையை அணுகி, புகார் அளித்துள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரின் மகன் எடுத்த வீடியோவையும் அவர் காவல்துறையினரிடம் ஆதாரமாகக் காட்டியுள்ளார்.
குற்றம் புரிந்த முதியவர் இந்தச் சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று சிறுமியை மிரட்டியுள்ளார். சிறுமியும் இதனால் பயத்தில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். ஒருநாள் அந்தக் கிழவரின் மகன் சிறுமியின் தந்தையிடம் தான் எடுத்த வீடியோவைக் காட்டிய பின்புதான், சிறுமி தந்தையிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.
சுனிதா விஸ்வநாத் யார்? அமெரிக்காவில் ராகுல் காந்தியை சந்தித்த பின் சர்ச்சையில் சிக்கியது ஏன்?
குற்றம்சாட்டப்படும் கிழவர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். அடிக்கடி சிறுமியின் வீட்டுக்குச் சென்று பழகி வந்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் சென்ற ஆன்மிகப் பயணங்களில் இந்தக் கிழவரும் உடன் வந்திருப்பதாக சிறுமியின் தந்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமி தனது வீட்டிற்கு வெளியே தனியாக இருந்தபோது, முதியவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, ஒரு மறைவான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த முதியவரின் 40 வயது மகன், தனது தந்தையின் செயலை தன் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.
முதியவரின் மகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதே வீட்டில்தான் வசித்து வந்திருக்கிறார். அவருக்கும் அவரது தந்தைக்கும் இடையேயான உறவு கசப்பானதாக இருந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீசார் தந்தை மற்றும் மகன் இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணையைத் தொடர்கின்றனர்.
எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் நடக்கும்: சரத் பவார் அறிவிப்பு
இவர்கள் இருவர் மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376, 506, 354 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்ய வேண்டாம் என்று வற்புறுத்தியதாக, சிறுமி குடும்பத்தின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நரேந்தர் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது தனியாக கிரிமினல் மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப்பட்டுள்ளார். அவருக்கு மனநல ஆலோசனை வழங்க குழந்தைகள் நலக் குழுவக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
வேறு சாதி பையனை காதலித்த மகளைக் கொன்ற தந்தை! மனமுடைந்து ரயிலில் பாய்ந்த காதலன்!