தான் வீட்டில் இல்லாத போது தனது மனைவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த போலீசை கணவன் கடத்திச் சென்று செதில் செதிலாக வெட்டி பழிதீர்த்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
தான் வீட்டில் இல்லாத போது தனது மனைவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த போலீசை கணவன் கடத்திச் சென்று செதில் செதிலாக வெட்டி பழிதீர்த்துள்ள சம்பவம் நடந்துள்ளது.பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாட்டின் எல்லைகள் கடந்து உலக அளவில் பரவலாக அரங்கேறி வருகிறது. செய்தித்தாள்களை திருப்பினால் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான செய்திகளே ஆக்கிரமித்துள்ளன. சிறு வயது குழந்தைகள் முதல் 60 வயது மூதாட்டிகள் வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர். கோவில், பள்ளிக்கூடம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என எல்லா இடங்களிலும் பரவலாக பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அரங்கேறி வருகிறது.
இதையும் படியுங்கள்: காதலன் உடன் கண்றாவி கோலத்தில் மனைவி... கையும் களவுமாக பிடித்த கணவன்... கல்லால் அடித்து கொலை.
இது போன்ற குற்றங்களை தடுக்க அரசும், காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இந்த வகையில் அண்டை நாடான பாகிஸ்தானில் முக்கிய நாகரமான லாகூரில் கணவன் வீட்டில் இல்லாத போது மனைவியை போலீஸ்காரர் ஒருவர் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார் பின்னர் இதைத் தொடர்ந்து நடந்த சம்பவம் பூதாகரமாக மாறியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் நகரில் கடந்த கடந்த சிலமாதங்களாக ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது, போலீஸ் கான்ஸ்டபிள் காசிம் ஹயாத் என்பவர் உள்ளூரை சேர்ந்த முகம்மது இப்திகார் என்பவரின் மனைவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: காதலில் மண்ணைப் போட்ட கல்லூரி பேராசிரியர்.. வகுப்பறையில் நுழைந்து தூக்கிபோட்டு குத்திய மாணவன்.
இதை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் அந்த பெண்ணை அவர் மிரட்டி வந்துள்ளார், அது மட்டுமின்றி அந்தப் பெண்ணை அடிக்கடி பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்து அவர் தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவனுக்கு தெரிய வந்தது இந்நிலையில், கணவர் முகமது இப்திகார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கான்ஸ்டபிளை பழிதீர்க்க திட்டமிட்டார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் காசிம் ஹயாத்தை இப்திகார் நண்பர்கள் பத்து பேருடன் சேர்ந்து கடத்தினார்.
பின்னர் அவரை ஒதுக்குப்புறமான இடத்திற்கு தூக்கிச்சென்று முகத்தில் காது உதடு உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் சரமாரியாக வெட்டினர். அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார், பின்னர் இப்திகார் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பினர், பின்னர் அங்கிருந்து எப்படியோ தப்பி வந்த காசிம் ஹயாத் தனக்கு நேர்ந்த வற்றை குறித்து காவல்நிலையத்தில் புகார் கூறினார். பின்னர் அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் காவலரை கடத்தி தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.