திருச்சியில் வாலிபரை கதறவிட்ட ஓரினச்சேர்க்கை காம கொடூரன்கள்; 5 போதை ஆசாமிகள் அதிரடி கைது

By Velmurugan s  |  First Published Dec 18, 2023, 10:20 AM IST

திருச்சியில் ஓரினச்சேர்ச்க்கையில் ஈடுபட வற்புறுத்தி இளையரை தாக்கிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த முப்பிடாதி என்பவரது மகன் காளிராஜ்(வயது 24). தனது நண்பரின் தம்பி கவிமணி என்பவர் வாகன விபத்தில் காயமடைந்து, திருச்சி மாவட்டம், இருங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரை பார்ப்பதற்காக வந்துள்ளார். மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர், தனது பெயர் வசந்த் என்றும், காளிராஜிடம் நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என கேட்டதற்கு திருச்சிக்கு செல்ல வேண்டும் என கூறவே, அவரிடம் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து வசந்த் அவரது வாகனத்தில் காளிராஜை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி சென்ற போது தனது விட்டிற்கு சென்றவுடன் திரும்பி வந்துவிடாலம் என கூறி இருங்களுர் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு கதவை மூடி தாழ்ப்பாள் போட்டுள்ளார். அப்போது அங்கு மது, கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த கவியரசன், யுவராஜ், ரவி போஸ்கோ மற்றும் அய்யனார் ஆகியோரிடம் வசந்த் அறிமுகப்படுத்தியதாக தெரிய வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சிறிது நேரத்தில், மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த அனைவரும் தங்களுடன் இயற்கைக்கு மாறாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு காளிராஜை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் காளிராஜ் இதற்கு மறுத்துள்ளார். ஆனால் போதையில் இருந்தவர்கள் அதனை பொருட்படுத்தாமல், பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டியும், அவரை வலுக்கட்டாயமாக தாக்கியும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

ஒரே விமானத்தில் கோவைக்கு சென்ற ஆளுநர் ரவி- முதலமைச்சர் ஸ்டாலின்- என்ன பேசிக்கொண்டார்கள் தெரியுமா.?

அதன் பின்னர், காளிராஜிடம் அவரது சாதி குறித்து விசாரித்து, அவரது ஜாதிப் பெயரைக் கூறி இழிவான வார்த்தைகளால் திட்டி, பயங்கர ஆயுதங்களை  காட்டி காளிராஜிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1100 ஆகியவற்றினை பறித்துக்கொண்டனர். இந்நிலையில் மேற்படி காளிராஜ், போதையில் இருந்தவர்களிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி அழுதபோது, இங்கு நடத்த சம்பவங்களை வெளியே கூறினால் உன்னை காலி செய்து விடுவோம் எனக்கூறி வசந்த் தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி மெயின் ரோட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டார்.

தென் மாவட்டங்களை மிரட்டும் பேய் மழை.. புயலும் இல்லை.. ஒரு ஆண்டுக்கான மழை ஒரே நாளில் பெய்ய என்ன காரணம்?

இந்நிலையில் காளிராஜ் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று அருகில் இருந்தவர்களிடம் போன் வாங்கி திருச்சி மாவட்ட காவல் உதவி எண்ணுக்கு போன் செய்து நடந்த சம்பவத்தினை கூறியுள்ளார். மேலும் தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காளிராஜிடம் சமயபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  5 வாலிபர்களையும் உடனடியாக கைது செய்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!