Dhanush Raayan : நடிகர் தனுஷின் ராயன் திரைப்பட வெற்றியை தொடர்ந்து அவருக்கு 2 செக் கொடுத்து Surprise கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
பிரபல நடிகர் தனுஷ் இரண்டாவது முறையாக இயக்குனராக களம் இறங்கிய திரைப்படம் தான் "ராயன்". கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி உலக அளவில் வெளியாகி, இன்று வரை சுமார் 158 கோடி ரூபாயை அந்த திரைப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பா. பாண்டி என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கிய தனுஷ், தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி வெளியிட்டார்.
ராயன் திரைப்படத்தில் மூத்த தமிழ் திரை உலக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே சூர்யா, சரவணன், இளம் நடிகர்கள் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், நடிகைகள் துஷாரா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலரும் நேர்த்தியாக தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அது மட்டும் அல்லாமல் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவனும் நடித்திருந்தார்.
த.வெ.க கொடி.. அது வாகை மரம் இல்லையாம்; அப்புறம் அது என்ன மரம்? இதென்னப்பா புது விளக்கம்!!
திரைக்கதையின் ஓட்டம் இப்பட வெற்றிக்கு 50 சதவீத காரணம் என்றால், மீதமுள்ள 50 சதவீத வெற்றியை உறுதி செய்தவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் என்றால் அது மிகையல்ல. ராயன் திரைப்படத்தில் ஒலித்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக மாறியது. குறிப்பாக "வாட்டர் பாக்கெட்" பாடல் மற்றும் "ஓ ராயா" பாடலும் மிகப்பெரிய வரவேற்பை இன்றளவும் பெற்று வருகிறது.
ஒரு படம் பெரிய அளவில் வெற்றி பெறும் சமயத்தில், அப்பட தயாரிப்பாளர்கள் இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் பரிசு பொருள்களை வழங்குவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படத்தின் தயாரிப்பாளர் "சன் பிக்சர்ஸ்" நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், நடிகர் தனுஷை சந்தித்து இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார்.
Mr. Kalanithi Maran congratulated for the grand success of and presented 2 cheques to him - one for the hero and one for the director. pic.twitter.com/gp12Z8s6bl
— Sun Pictures (@sunpictures)ஒரு காசோலை நடிகர் தனுஷிற்கும், மற்றொரு காசோலை இயக்குனர் தனுசுக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர் ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறது. ஒரு செக்கிற்கு ஒரு கோடி ரூபாய் என்ற வீதத்தில், இரண்டு கோடி ரூபாயை தனுஷுக்கு கலாநிதி மாறன் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
நிர்வாண காட்சி.. பரபரப்பை கிளப்பிய ஆண்ட்ரியாவின் "பிசாசு 2" - ரிலீஸ் ஆகுமா? மிஷ்கின் ஓபன் டாக்!