கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியீடு!

By manimegalai aFirst Published Nov 7, 2022, 6:30 PM IST
Highlights

கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளியாகியுளளது. 
 

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் வைரமுத்து. பல முன்னணி ஹீரோக்களுக்கு, காதல் பாடல்களை எழுதிய இவர், பல தலைசிறந்த நாவல்களையும் எழுதியுள்ளார். இந்நிலையில் இவர் எழுதிய நூல் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியாக உள்ளது. 

கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலாகும். 23 மொழிகளில் சாகித்ய அகாடமி அதை மொழிபெயர்த்து வருகிறது. இந்தி - உருது -மலையாளம் - கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து இப்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கிறது. இதனை கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்திருக்கிறார்.

துபாயில் நவம்பர் 9, புதன்கிழமை அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறும் ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ என்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்படுகிறது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32நாடுகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொள்கிறார்கள்.

Breaking: நடிகர் பிரபாஸின் 'ஆதிபுருஷ்' ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! படக்குழு வெளியிட்ட தகவல்..!

மாநாட்டின் தலைவர் தொழிலதிபர் சிவகுமார், ரைஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், துணைத் தலைவர்கள் ஆல்பிரட் பெர்க்மென்ஸ், ஜோஸ் மைக்கேல் ராபின், சாகுல் ஹமீது, பஷீர் கான் ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள்.

கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்.. ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்! ரகசியத்தை உடைத்த ஆர்கே செல்வமணி

click me!