ரேஷ்மா பசுபுலேட்டி ஹாட் உடைகள் அணிந்து எக்குதப்பான ஸ்டெப்புகள் போட்டு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
தெலுங்கு தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளர் மற்றும் ரிப்போர்ட்டராக இருந்து புகழ்பெற்றவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் ரம்யா கிருஷ்ணன் முக்கிய ரோலில் நடித்த வம்சம் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். சன் டிவியில் ஒளிபரப்பான இந்த தொடர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்தது. இதை அடுத்து 2016 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்த அசத்தியிருந்தால் ராஸ்மிகா. இந்த படத்தின் மூலம் தான் இவர் அதிகமாக அறியப்படுகிறார்.
மேலும் செய்திகளுக்கு...என் கணவரை உருவக்கேலி செய்யதீர்கள்...வேண்டுகோள் விடுக்கும் விஜே மஹாலட்சுமி
முன்னதாக சிவா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த மசாலா படத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி தோன்றி தனது சினிமா என்ட்ரியை கொடுத்திருந்தார். பின்னர் கோ 2, மணல் கயிறு 2, பெண்கள், திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் மாமா, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ல் பங்கேற்ற ரேஷ்மா தன் சொந்த வாழ்க்கை குறித்து பேசி இருந்தது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இத மூலம் பிரபலமானார் ரேஷ்மா.
மேலும் செய்திகளுக்கு...அதற்குள் ஓடிடி - க்கு போன கார்த்தியின் விருமன் ...எப்ப ரிலீஸ் தெரியுமா?
தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் 3 கொண்டாட்டம், வணக்கம் தமிழா உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்கலில் இவர் கலந்து கொண்டார். தற்போது விஜய் டிவிகள் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமியில் ராதிகாவாக நடித்த வருகிறார் ரேஷ்மா. பாக்கியலட்சுமியின் கணவர் கோபியின் முன்னாள் காதலியாக நடித்து வரவேற்பு பெற்று வரும் ரேஷ்மாவிற்கு ராதிகாவின் ரோல் பக்காவாக பொருந்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...ரன்வீரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை..இன்ஸ்டாவில் குழப்பும் தீபிகா படுகோண்
சமூக ஊடகங்களிலும் பிசியாக இருக்கும் இவர் அப்போது குதூகலமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அதோடு ஹாட் உடைகள் அணிந்து எக்குதப்பான ஸ்டெப்புகள் போட்டு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவ்வாறு இவர் வெளியிடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கமாகிவிட்டது.