Asianet News TamilAsianet News Tamil

உலகின் முதல் 10 ஏழ்மையான நாடுகள் எவை? பட்டியல் இதே!

உலகின் முதல் 10 ஏழ்மையான நாடுகள் எவை என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
 

Top 10 poorest countries in the world by GDP
Author
First Published Feb 7, 2024, 4:56 PM IST

இந்த உலகத்தில் ஏராளமான செல்வங்கள், இயற்கை வளங்கள் குவிந்துள்ள போதிலும், சில நாடுகள் கடுமையான வறுமையில் தொடர்ந்து தவிக்கின்றன. அந்த வகையில், நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில், இந்த கட்டுரையில் உலகின் ஏழ்மையான நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பு உலகின் ஏழ்மையான நாடுகள் எவ்வாறு தரவரிசைப்படுத்தப்படுகின்றன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

உலகின் ஏழ்மையான நாடுகள் எவ்வாறு தரவரிசைப்படுத்தப்படுகின்றன?
ஜிடிபி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் குறிக்கிறது, இது ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் ஒரு நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. ஒரு நாடு பணக்கார நாடா அல்லை ஏழை நாடா என்பதை சரியாக அறிந்து கொள்ள அதன் மக்கள் தொகையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதன்படி, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பெற, மொத்த உள்நாட்டு உற்பத்தியை நாட்டில் உள்ள மொத்த மக்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்.

சில நேரங்களில், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது சில விஷயங்களை மட்டுமே எடுத்துக்காட்டும். ஏனென்றால், வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்க விகிதங்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நிறைய மாறுபடும். எனவே, PPP எனப்படும் வாங்கும் திறன் சமநிலையானது நியாயமான ஒப்பீடுகளை செய்ய உதவுகிறது. PPP என்பது வாங்கும் சக்தி சமநிலையைக் குறிக்கிறது. மேலும், பல்வேறு நாடுகளின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி மிகவும் துல்லியமாக தெரிந்து கொள்ளும் பொருட்டு, உள்ளூர் செலவுகள் மற்றும் பணவீக்க விகிதங்களை இது கணக்கிடுகிறது. சில நாடுகள் வரி புகலிடங்களாக இருப்பதால் ஜிடிபியை செயற்கையாக உயர்த்தியிருக்கலாம். எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையானது உலகின் ஏழ்மையான நாடுகளைக் கண்டறிய உதவும் முக்கிய கருவியாகும்.

மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் ரயில்: பிப்ரவரி 29ஆம் தேதி முக்கிய ஆலோசனை!

அந்த வகையில், சர்வதேச நாணய நிதியம் மதிப்பீட்டின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியல் பின்வருமாறு;

1. தெற்கு சூடான் - இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாங்கும் திறன் சமநிலையானது 515.75 டாலராக உள்ளது. எண்ணெய் வளம் அதிகம் உள்ள தெற்கு சூடான் நாட்டில் 11 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்வதாக தரவுகள் கூறுகின்றன.

2. புருண்டி - இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாங்கும் திறன் சமநிலையானது 891 டாலராக உள்ளது. நீண்டகாலமாக உள்நாட்டு போரை சந்தித்து வரும் இந்த நாட்டில், தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை பெறுவதே கடினம்.

3. மத்திய ஆப்பிரிக்க குடியரசு - இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாங்கும் திறன் சமநிலையானது 1,130 டாலராக உள்ளது. தங்கம், எண்ணெய், யுரேனியம், வைரம் என பல மதிப்புமிக்க விஷயங்கள் இருந்தாலும் இன்னும் வறுமையில் பிடியிலேயே இந்த நாடு உள்ளது.

4. சோமாலியா - இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாங்கும் திறன் சமநிலையானது 1,370 டாலராக உள்ளது. வறுமை என்றாலே முதலில் சொல்லப்படும் நாடு சோமாலியாதான். 1960இல் சுதந்திரம் பெற்ற இந்த நாடு, ராணுவ கொடுங்கோல், கடற்கொள்ளையர்கள் என இன்னல்களுக்கு உள்ளாகி, பொருளாதாரத்தில் பின் தங்கி, வறுமையின் கோரப்படியில் சிக்கியுள்ளது.

5. காங்கோ - இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாங்கும் திறன் சமநிலையானது 1,474 டாலராக உள்ளது.

6. மொசாம்பிக் - இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாங்கும் திறன் சமநிலையானது 1,556 டாலராக உள்ளது.

7. நைஜர் - இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாங்கும் திறன் சமநிலையானது 1,600 டாலராக உள்ளது

8. மலாவி - இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாங்கும் திறன் சமநிலையானது 1,682 டாலராக உள்ளது

9. சாட் - இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாங்கும் திறன் சமநிலையானது 1,797 டாலராக உள்ளது

10. லைபீரியா - இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாங்கும் திறன் சமநிலையானது 1,798 டாலராக உள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios